தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்: சிபிஎம்
திருவாரூர்:
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன்கூறியுள்ளார்.
திருவாரூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்மொழி பற்றி மத்திய, மாநில அரசின் கொள்கைகளில் மாறுதல் கொண்டுவரவேண்டிய நிலை உள்ளது. நீதிமன்றம், பயிற்சி மொழி, அரசு நிர்வாக துறை உட்பட பலவற்றில் தமிழ் இல்லை.
இதற்கு கொள்கை அளவிலான போராட்டத்தினை முன்னிருத்தி செல்ல வேண்டுமே தவிர விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றோர் தமிழ் பாதுகாப்பு இயக்கம் மூலம் பெயர் பலகை அழிப்பு, சினிமாவுக்குதடை விதிப்பது போன்ற போராட்டங்கள் தமிழ் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது. அவை தேவையில்லாத பிரச்னைகளைத்தான்ஏற்படுத்தும்.
தமிழ் வளர்ச்சிக்காக மார்க்சிஸ்ட் கட்சி அனைத்து வகையிலும் போராடி வருகிறது. தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகளில் 70 ஆயிரம் ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளது. 150 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையில் இருக்கும்போது தமிழ் எப்படி வளரும்?. எனவேஇதைப்பற்றி எல்லாம் ராமதாஸ், திருமாவளவன் பேச வேண்டும்.
தமிழகத்தில் தலித் பிரச்னை அதிகமாக உள்ளது. நாகரீகம் வளர்ந்துள்ள இந்தக் கால கட்டத்தில் கிராமங்களில் இன்றும் தீண்டாமை பிரச்னைஉள்ளது. முறைசாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்குதிருமாவளவன், ராமதாஸிடம் பதில் உள்ளதா?
தமிழ்நாட்டில் ஏராளமான மக்கள் பிரச்னை இருக்கும் போது, கூட்டணி ஆட்சி பற்றிய சர்ச்சை இப்போது தேவையில்லை.
அரசியல் என்பது ஒரு வழிப்பாதை அல்ல. ஆதரிப்பது மட்டுமே கொள்கையாக இருக்க முடியாது. பிரச்னைகளுக்கு போராட தயங்கமாட்டோம்.
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. 50 ரூபாய்க்கு கூட கொலை செய்ய கூலி ஆட்கள் கிடைக்கும் நிலைஇங்கு உள்ளது என்றார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications