பல்டி அடித்தது ஏன்? இளங்கோவன் மழுப்பல்
சென்னை:
கூட்டணி ஆட்சி குறித்துப் பேசி விட்டு இப்போது பல்டி அடித்தது ஏன் என்பதற்கு மழுப்பலான பதிலை மத்திய அமைச்சர் இளங்கோவன்கூறியுள்ளார்.
தஞ்சை வந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி ஆட்சி குறித்து நான் முதலில் பேசியதிலிருந்து பின் வாங்கினேன்என்றோ, முன் வாங்கினேன் என்றோ கூற முடியாது.
கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது, அதை மறுப்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்று கருணாநிதியே கூறியுள்ளார். அதுபோலஇந்தக் கேள்வியைக் கேட்கும் உரிமை உங்களுக்கு (நிருபர்களுக்கு) உள்ளது. அதற்கு மழுப்பலாக பதிலைச் சொல்லும் உரிமை எனக்குஉள்ளது.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மிகச்சிறந்த பட்ஜெட்டை கொடுத்துள்ளார். இந்த பட்ஜெட்டால் தமிழ்நாட்டுக்கு பல்வேறு நன்மைகள்கிடைத்துள்ளது.
கையால் செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு வரி ரத்து, எந்திரம் மூலம் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு வரி குறைப்பு, சமையல் எண்ணைவரி ரத்து, வருமான வரிக்கான வரம்பு உயர்த்தப்பட்டது ஆகியவை சிறப்பான அம்சங்களாகும்.
இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பயனடைவார்கள். வங்கியில் 10,000 ரூபாய் பணம் எடுத்தால் 10 ரூபாய் வரிஎன்பது மக்களிடையே சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது உண்மை தான். இந்த வரி குறைக்கப்படும் என நம்புகிறேன்.
ப. சிதம்பரத்தை முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்தது நாகரீகம் கிடையாது. மத்திய அமைச்சர் போன்ற உயர் பதவிகளில்இருப்பவர்கள் பற்றி பேசும்போது யாராக இருந்தாலும் அளந்து பேச வேண்டும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications