இலங்கை விவகாரம்: சட்டசபையிலிருந்து திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்
சென்னை:
தமிழக சட்டசபையிலிருந்து இன்று திமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
பட்ஜெட் மீதான இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு திமுக உறுப்பினர் மி.ஆ. வைத்தியலிங்கம் பேசுகையில்,சுனாமி நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ராணுவத்தினரை முதல்வர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, இலங்கைக்கு அமைதிப் பணியாற்றச் சென்று திரும்பியராணுவத்தினரை வரவேற்க அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி செல்லவில்லை. மேலும் ராணுவத்தினர்குறித்து மிகக் கடுமையாகவும் அவர் விமர்சித்தார். இப்போது ராணுவத்தினருக்காக திமுகவினர் முதலைக் கண்ணீர்வடிக்கின்றனர்.
சுனாமி நிவாரணப் பணிகளில் ராணுவத்தினர் இறந்தவர்களின் உடல்களை அகற்ற மறுத்தனர். அதைத்தான் நான்கூறினேன். அந்தப் புகாரை நான் மறுக்கவில்லை.
அதே நேரத்தில் ராணுவத்தினர் மீது எனக்கு நிறையவே மரியாதை உள்ளது. மாநிலங்களைவை உறுப்பினராகஇருந்தபோது ராணுவத்தினர் குறித்து 2 நாட்கள் பேசினேன். நான் பேசியதைத் தொடர்ந்து ராணுவத்தினருக்குஊதியம் உயர்த்தப்பட்டது.
ஆனால், போருக்குப் போய்விட்டு வந்த ராணுவத்திரை உங்கள் தலைவர் ஏன் வரவேற்கவில்லை. இது போன்றநாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.
ஜெயலலிதா பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமானதுரைமுருகன்,
ராணுவத்தினர் உடல்களை அகற்ற மறுத்தார்கள் என்று நீங்கள் சொல்வதை டெல்லியில் ஒரு ராணுவ அதிகாரிமறுத்துள்ளார். இலங்கைக்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக சென்ற ராணுவத்தினர் அங்கு தமிழ்ப் பெண்களைகற்பழித்தனர் என்பதால்தான் கருணாநிதி அவர்களை வரவேற்க செல்லவில்லை என்றார்.
அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் காளிமுத்து அறிவித்தார்.
அப்போது எழுந்த ஜெயலலிதா, துரைமுருகன் என்ன பேசினார் என்பதை இந்த நாடும், ராணுவத்தினரும் அறிந்துகொள்ள வேண்டும். எனவே அதை மீண்டும் அவைக் குறிப்பில் ஏற்ற வேண்டும் என்றார். அதை சபாநாயகர்ஏற்றார்.
இதைத் தொடர்ந்து துரைமுருகன் எழுந்து பேசினார். ஆனால், அதை அவைக் குறிப்பில் இருந்து காளிமுத்துநீக்கினார்.
தொடர்ந்து திமுகவினர் எழுந்து பேச முயன்றனர். ஆனால், அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து அவர்கள்கோஷமிட்டனர். பரிதி இளம்வழுதி சபாநாயகரை நோக்கி கையைக் காட்டி மிகவும் சப்தமாக ஏதோ பேசினர்.
இதையடுத்து அவை முன்னவரும், நிதியமைச்சருமான பொன்னையன் எழுந்து, பரிதி இளம்வழுதி மிகவும்ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார். எனவே அவரை அவையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார்.
இதை ஏற்ற சபாநாயகர், அவைக் காவலர்களை அழைத்து பரிதியை வெளியேற்றுமாறு உத்தரவிட்டனர். இதற்குதிமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து பரிதியைச் சுற்றி அரண் போல நின்று காவலர்களை நெருங்கவிடாமல் தடுத்தனர்.
இதனால் கோபமடைந்த காளிமுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி எழுந்து, திமுக உறுப்பினர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை காளிமுத்து நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து, தாங்களும் வெளிநடப்புச் செய்வதாக கூறி விட்டு பாமகவினர் வெளியேறினர்.












Click it and Unblock the Notifications