நாளை ஜெயேந்திரர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்
காஞ்சிபுரம் :
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 24 பேருக்கும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்குவது மேலும் தாமதமாகும் என்றுதெரிகிறது.
இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, கதிரவன் உள்ளிட்ட 25 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்ரூவரானதால்குற்றவாளிகள் பட்டியலிலிருந்து ரவி சுப்பிரமணியம் விலக்கப்பட்டுள்ளார். மற்ற 24 பேர் மீதும் ஜனவரி 21ம் தேதி குற்றப் பத்திக்கைதாக்கல் செய்யப்பட்டது.
1,873 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிக்கையை நகல் எடுக்கும் பணி நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி 10ம் தேதி நகல்கள்வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் நகலெடுக்கும் பணி இன்னும் முடியவில்லை என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில்தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிப்ரவரி 24ம் தேதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றும் நகல்கள் வழங்கப்படவில்லை. இருநாட்களும் ஜெயேந்திரர் உள்ளிட்ட 24 பேரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயேந்திரர் உள்ளிட்ட 24 பேரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர். குற்றப் பத்திரிக்கைநகல் வழங்கப்படுமா என்பது அப்போது தெரிய வரும்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications