கேரள காங்கிரசில் பெரும் குழப்பம்: கருணாகரன் போர்க்கொடி- மகன் சஸ்பெண்ட்!
டெல்லி:
காங்கிரஸ் உயர்மட்டக் குழுவின் எச்சரிக்கையையும் மீறி கோஷ்டிப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்ததால்,முன்னாள் கேரள முதல்வர் கருணாகரனின் மகனும், அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவருமான முரளிதரன்கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மற்ற மாநிலங்களைப் போலவே கேரளாவிலும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப்பூசலுக்கு எந்த பஞ்சமும் இல்லைது.இங்கு பல கோஷ்டிகள் இருந்தாலும் முன்னாள் முதல்வர்களான கருணாகரன் மற்றும் அந்தோணி அணிகளுக்குஇடையே தான் அடிக்கடி மோதல் ஏற்படும்.
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஏற்கெனவே பலமுறை முதல்வராக இருந்த மூத்த தலைவரான கருணாகரனுக்கு மீண்டும் முதல்வராக முயன்றார்.
ஆனால் ஏ.கே. அந்தோணியை முதல்வராக்கினார் சோனியா. இதையடுத்து அந்தோணிக்கு பல வழியிலும்நெருக்கடி கொடுத்து வந்தார் கருணாகரன். மந்திரிசபையில் தனது மகன் முரளிதரனுக்கு இடம் தரவேண்டுமென்றுவற்புறுத்தினார்.
இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் முரளிதரனுக்கு மின் துறை அமைச்சர் பொறுப்பை அந்தோணிவழங்கினார். தேர்தலில் நிற்காமலேயே முரளிதரன் அமைச்சரானார். அப்போது அவர் எம்எல்ஏவாக இல்லை.
அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு தனது கோஷ்டியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவை ராஜினாமா செய்ய வைத்து விட்டுஅந்த தொகுதியில் முரளிதரன் போட்டியிட்டார். ஆனால் ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்த அந்தோணிகோஷ்டியினர், இடைத் தேர்தலில் முரளிதரனை தோற்கடித்தனர்.
இதனால் வேறுவழியில்லாமல் முரளிதரன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய பரிதாப நிலைஏற்பட்டது. தனது மகனுக்கு ஏற்பட்ட அவமானத்தால் ஆத்திரமடைந்த கருணாகரன், சோனியா மற்றும்அந்தோணிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.
கட்சி உடைந்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டதால் அந்தோணி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதன் பிறகு முதல்வரான அந்தோணி கோஷ்டியைச் சேர்ந்த உம்மன் சாண்டியும், கருணாகரனின் பேச்சைக்கேட்கவில்லை. இதனால் அவருக்கும் கருணாகரன் பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.
ஆனால் உம்மன் சாண்டி, கருணாகரனின் எந்த அச்சுறுத்தலுக்கும் அசரவில்லை. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கேசென்ற கருணாகரன், கோழிக்கோட்டில் தனது கோஷ்டியினரின் பேரணியை இன்று (9ம் தேதி) நடத்தப்போவதாகஅறிவித்துள்ளார்.
இந்தப் பேரணிக்கு காங்கிரஸ் மேலிடம் அனுமதி மறுத்தது. ஆனால் மேலிடம் அனுமதிக்காவிட்டாலும் பேரணியைகண்டிப்பாக நடத்துவோம் என்று கருணாகரனும், அவரது மகன் முரளிதரனும் கூறினர்.
பேரணி இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், நேற்றிரவு காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில பொறுப்பாளர்அகமது படேல், சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
இதன் பிறகு முரளிதரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவல்முரளிதரனுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் தென்னல பாலகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.
ஆனால், தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதம் தனக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றும்திட்டமிட்டபடி பேரணி நடக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
முரளிதரன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் கருணாகரனின் அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று சட்டசபையில் இன்று காலை முதல் எதிர்க் கட்சித் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தலைவருமான அச்சுதானந்தன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகளின் பிரச்சனையைமுன் வைத்து அவர் இப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications