குருமூர்த்தி மீது ஆடிட்டர்கள் சங்கத்தில் பிரேம்குமார் புகார்
சென்னை:
ஆடிட்டர் குருமூர்த்தி, இந்திய ஆடிட்டர்கள் சங்கத்தின் அனுமதியில்லாமல் கட்டுரைகள் எழுதி வருவதாக அவர் மீது புகார் காஞ்சிபுரம்மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் புகார் கொடுத்துள்ளார்.
ஆடிட்டர்கள் சங்கத்தின் விதிமுறைகளின்படி அதன் அனுமதியில்லாமல், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் யாரும் பத்திரிக்கைகளில்கட்டுரைகள் எழுதக் கூடாது. ஆனால், பத்திரிக்கையாளர் என்ற வகையில் குருமூர்த்தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
(ஆனால், பத்திரிக்கையில் எழுதுபவர்கள் எல்லாம் பத்திரிக்கையாளர் ஆகிவிட முடியாது, குருமூர்த்தி ஒரு பத்திரிக்கையாளரே அல்லஎன்கிறார் என்று மூத்த பத்திரிக்கையாளரான ஞானி)
இந் நிலையில் தன் மீது காஞ்சிபுரம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குக்கு தடை விதிக்கக் கோரி குருமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த வழக்கு தொடர்பாக எஸ்.பி. பிரேம்குமார் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், குருமூர்த்தி பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவதால் அவர் தனி உரிமை கோர முடியாது. ஆடிட்டரான குருமூர்த்தி, சார்ட்டர்ட்அக்கவுண்டன்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டின் அனுமதியில்லாமல் கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுகுறித்து டெல்லியில் உள்ளஇன்ஸ்ட்டிடியூட்டில் புகார் கொடுத்துள்ளேன்.
குருமூர்த்தி மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. அவரைப் பழிவாங்கும் நோக்கில் நான் செயல்படவில்லை. ஒவ்வொருவருக்கும்கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது. இருப்பினும், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்ககுருமூர்த்திக்கு மட்டும் விலக்குக் கொடுக்கப்படவில்லை.
சங்கரராமன் கொலை வழக்கில் நான் சட்டவிரோதமாக செயல்படுவதாக சில பத்திரிக்கைகளில் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. எனதுபெயரைக் கெடுக்க முயற்சி நடக்கிறது. நான் எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஏதாவது சாயம் பூச முயல்கிறார்கள்.
நான் முன்பு நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவன் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இதில் குருமூர்த்தியின்வழக்கறிஞருக்கும் பங்குண்டு.
விசாரணையின்போது குருமூர்த்தி பல உண்மைகளை மறைத்தார். கட்டுரையாளர் என்பதற்காக அவருக்கு சிறப்பு உரிமைகள் எல்லாம் தரமுடியாது. எனவே குருமூர்த்தியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பிரேம்குமார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 14ம் தேதி நடக்கிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications