என்ன திருநீரா கேட்கிறாய்? திமுகவின் நையாண்டி தர்பார்
சென்னை:
தமிழக சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொண்ட முறை குறித்த வரலாறு தெரியாமல் சபாநாயகர் காளிமுத்து அவர்களைபாராட்டுகிறார் என்று சட்டசபை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார்.
சட்டசபையில், திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதியை சபாநாயகர் காளிமுத்து இன்று வெளியேற்றினார். இதை எதிர்த்துதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.
சபையை விட்டு வெளியே வந்த துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டசபையில் திமுகதான் தறி கெட்டு நடக்கிறது, காங்கிரஸ்காரர்கள் அமைதியாக இருக்கிறார்கள், பாமகவினர் அமைதியாகஇருகிகறார்கள் என்று கூறுகிறார் முதல்வர்.
அவர் கூறுவதை அப்படியே வழி மொழிகிறார் சபாநாயகர் காளிமுத்து. அவருக்கு சட்டசபை வரலாறு தெரியாது. இதே காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன்பு ஒரு முறை சட்டசபைக்குள் இருந்து கொண்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.
சபையை விட்டு வெளியேற மறுத்தனர். இரவு முழுவதும் உள்ளே இருந்தார்கள், அடுத்த நாள் மதியம் வரை உள்ளேயேஇருந்தார்கள். மொத்தம் 2 நாட்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி சபையை நடத்த விடாமல் செய்த வீரர்கள்தான்காங்கிரஸ்காரர்கள். அவர்களா அமைதியானவர்கள்?
திமுகவினர் யாரும் எதையும் பேசக் கூடாது, எங்களை சட்டசபையை விட்டு வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதில்முதல்வரும், சபாநாயகரும், அமைச்சர்களும் மிகத் தீவிரமாக, கவனமாக இருக்கின்றனர் என்றார் துரைமுருகன்.
நடுரோட்டில் நையாண்டி தர்பார்:
![]() |
துரைமுருகன் இரண்டு கைகளையும் தட்டி ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார். சட்டசபையில் காளிமுத்து எப்படி நடந்து கொள்வார் என்பதையும் தனக்கே உரியமேனரிசத்துடன் மிமிக்ரி செய்து காட்டினார். முதல்வர் வரும்போது சபாநாயகர் எப்படி நடந்துகொவார் என்பதை அவர் நடித்துக் காட்டினார்.
நடுரோட்டில் நடந்த இந்த நையாண்டி தர்பாரை அங்கு நின்று பொது மக்கள் மிகவும் ரசித்தனர். பின்னர் ஜால்ரா அடித்தபடியே பஜனைப் பாட்டு பாடினார்.
அப்போது திமுக எம்.எல்.ஏ. அசோகன், "சாமி! திருநீறு கொடுங்க என்றார்.
அப்போது பொன்முடி குறுக்கிட்டு," என்ன திருநீறா கேட்கிறாய்? தமிழ்நாடு ஆஸ்பத்திரியை பங்கு போட வந்திருக்கிறாயா ? என்று காஞ்சி மடவிவகாரத்தை இணைத்துப் பேசியபோது எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் கைகொட்டி சிரித்தனர்.
இதைத் தொடர்ந்து பாசமலர்கள் படத்தில் வரும், "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்ற பாடலை வரியை மாற்றி காளிமுத்துவை கிண்டல்செய்வது போல துரைமுருகன் பாடினார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications