ஸ்டாலினைக் கொல்ல முயற்சியா? மத்திய உளவுப் பிரிவு விசாரணை
சென்னை:
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினைக் கொலை செய்ய தமிழகத்தில் சதி நடந்து வருவதாக கூறப்படுவதுகுறித்து மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன்களான அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நீரு பூத்த நெருப்பாக உள்ள பூசலைமையமாக வைத்து ஸ்டாலினைப் போட்டுத் தள்ளவும், அழகிரியைத் தூக்கி உள்ளே வைக்கவும் முயற்சிநடப்பதாகவும், இதற்கு தமிழக உளவுப் பிரிவில் உள்ள ஒரு மூத்த அதிகாரியே திட்டமிட்டு காய் நகர்த்திவருவதாகவும் திமுக தரப்பில் திகீர் குற்றம் சாட்டப்படுகிறது.
காவல்துறையில் உள்ள தங்களது ஆட்கள் மூலம் இந்த சதியை மோப்பம் பிடித்ததாகவும், இந்த விவகாரத்தைமத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் திமுக தரப்பில் சொல்கிறார்கள்.
கடலூர் சிறையில் குண்டர் சட்டத்தில் உள்ள ஒரு ரெளடியை வெளியில் விட்டு காரியத்தை முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளதாக சொல்கிறது திமுக.
இச் சதித் திட்டத்திற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ஆற்காடு வீராசாமி கூறி வருகிறார்.
இந் நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் சட்டசபையில் கேட்டபோது, ஸ்டாலின் யாருடனும்பேசுவதில்லை, அவரைப் போய் யார் கொலை செய்யப் போகிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா நக்கலாகபதிலளித்தார்.
ஆனால், திமுகவின் இந்தப் புகாரை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. தனது உளவுப் பிரிவின்மூலமும் தகவல்களைத் திரட்டிய மத்திய அரசுக்கு சில அதிர்ச்சிகரமான தகவல்கள் போய்ச் சேர்ந்துள்ளன.
மேலும், ஆளுநர் பர்னாலாவும், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் சென்னை வந்து ரகசிய விசாரணையில்இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட அந்த தமிழக காவல்துறை உளவுப் பிரிவு அதிகாரியிடமும்மத்திய உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்டாலினையும் இக்குழுவினர் சந்தித்துள்ளனர். மத்திய பாதுகாப்பு தரத் தயாராக இருப்பதாகவும் அவரிடம்கூறியிருக்கிறார்கள், ஆனால் அதை ஸ்டாலின் மறுத்து விட்டதாக சொல்கிறார்கள்.
சென்னையிலிருந்து செயல்படும் மத்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகள் தமிழக அரசின்செயல்பாடுகள், தமிழக உளவுத்துறையின் செயல்பாடுகளை மத்திய அரசிடம் மறைப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர்களில் சிலருடைய தலைகள் உருளும் என்று தெரிகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications