நாளை பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெ. ஆஜராவாரா?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், சுதாகரன் ஆகியோர் வருமானத்தை மீறி சொத்துக் குவித்த வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நாளை (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
ஆனால், சட்டசபைக் கூட்டம் நடந்து கொண்டுள்ள நிலையில், நாளை காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது முதல்வர் பேசவேண்டியுள்ள சூழலில், ஜெயலலிதாநநிாளை பெங்களூர் செல்வாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.
ஜெயலலிதா, உடன் பிறவா சகோதரி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், தினகரன் ஆகியோர் ரூ. 66கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை தனி நீதிமன்றத்திலிருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டது. பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்குநாளை விசாரணைக்கு வருகிறது. நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தனி நீதிமன்றம் ஏற்கனவேநோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விசாரணைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. ஜெயலலிதா வந்தால் அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்கான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்திற்கு வருவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக சட்டசபையில்பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து ஜெயலலிதாநாளை பேசவுள்ளார்.
இதனால் அவர் பெங்களூர் செல்வாரா அல்லது தன்னால் ஆஜராக முடியவில்லை என்று வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்வாராஎன்பது உறுதியாகத் தெரியவில்லை.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications