விஜயக்குமாருக்கு விருது மறுப்பு ஏன்?
டெல்லி:
தமிழக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமாருக்கும், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணனுக்கும் விருதுகள் வழங்கப்படாததற்கு என்னகாரணம் என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது.
வீரப்பனை வீழ்த்தியதை கெளரவிக்கும் வகையில், அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமாருக்கு பத்மஸ்ரீ விருதும், செந்தாமரைக்கண்ணனுக்கு அசோக சக்கரா விருதும் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
ஆனால் இருவருக்கும் மத்திய அரசு விருதுகள் வழங்கவில்லை. இதை முதல்வர் ஜெயலலிதா பெரிய பிரச்சினையாக எழுப்பினார். இதுகுறித்து விளக்கம் கேட்டு அதிமுக எம்.பி. மலைச்சாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் அளித்துள்ள விளக்கத்தில், பத்மஸ்ரீ விருது வழங்க ஒரு காவல்துறைஅதிகாரியின் பெயரை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியிருந்தது. ஆனால் விண்ணப்பிப்பதற்குரிய காலக் கெடுவைத் தாண்டிவிண்ணப்பம் வந்ததால் அது தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
இன்னொரு அதிகாரிக்கு அசோக் சக்கரா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த விருதைப் பெறும் தகுதி அவருக்குஇல்லை என்பது தெரியவந்ததால் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்றார் ஜெய்ஸவால்.
மேலும், இரு அதிகாரிகளுக்கும், தமிழக அரசு பரிந்துரைத்துள்ள பதவி உயர்வு, ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான விதிமுறைகளின்படிமேற்கொள்ளப்பட முடியாது என்பதால் பதவி உயர்வும் அளிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications