பி.டி.ஆரை கண்டுகொள்ளாத திமுக தலைவர்கள்
திண்டுக்கல்:
திண்டுக்கல் திமுக மாநாட்டுக்கு வந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனை திமுக தலைவர்கள்கண்டுகொள்ளவில்லை. அவரும் மாநாட்டில் அதிக நேரம் இருக்கவில்லை.
மதுரையில் அழகிரி தொல்லையால் திமுகவில் இருந்து ஒதுங்கியிருந்த பி.டி.ஆர், முன்னாள் அமைச்சர்தா.கிருட்டிணன் கொலைக்குப் பின் சுத்தமாகவே கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
பின்னர் பி.டி.ஆரின் தூரத்து உறவினர் வீட்டில் ஸ்டாலின் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.இதன்மூலம் பிடிஆர்-திமுக உறவு கொஞ்சம் சரியானது.
ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. திண்டுக்கல் திமுக மாநாட்டுக்கு வந்த பி.டி.ஆர். நேராக மேடைக்குச்சென்று திமுக தலைவர் கருணாநிதியிடம் சால்வை ஒன்றைக் கொடுத்தார். அதை கருணாநதி புன்றுவலுடன்பெற்றுக் கொண்டார்.
பின்னர் கீழே இறங்கிய பி.டி.ஆர். புறப்பட்டுச் சென்று விட்டார். மாநாட்டில் அவர் பங்கெடுக்கவில்லை. பி.டி.ஆரைதிமுகவின் முன்னணித் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, குறைந்தபட்சம் வணக்கம் கூடசெலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
40 செல்போன்கள் மாயம்: மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பலருடைய செல்போன்கள் கூட்ட நெரிசலில்காணாமல் போயுள்ளன.
கிட்டத்தட்ட 40 செல்போன்கள் வரை காணாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. இவற்றில் பெரும்பாலானவைசெய்தியாளர்கள், புகைப்படக்காரர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலினுக்கு ஜால்ரா: மாநாட்டில் பேசிய அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல ஸ்டாலினைப் புகழ்ந்துதள்ளினர். வருகின்ற சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை வகித்து வெற்றி வாகை சூடப் போகிறார்ஸ்டாலின் என்று பலரும் பேசினர்.
இன்னும் சிலரோ, அடுத்த தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தால் காவல்துறை இடம் பெற்றுள்ள உள்துறை ஸ்டாலின்வசம் கொடுக்கப்படும். அதற்கப்புறம் பாருங்கள் வேடிக்கையை என்றெல்லாம் பேசி கைதட்டல் வாங்கினர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications