ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது பாஜக அரசு
ராஞ்சி:
ஜார்கண்டில் முதல்வர் அர்ஜூன் முண்டா தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு இன்று நம்பிக்கைவாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
சட்டசபையில் மொத்தமுள்ள 81 உறுப்பினர்களில் இரு எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் அவைக்கு வந்திருந்த 79 எம்எல்ஏக்களில் 40 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்ற முண்டாவின் அரசுவெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல இக் கூட்டணியைச் சேர்ந்த நாமாதாரி குரல் வாக்கெடுப்பின்மூலம் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
ஜார்கண்டில் பாஜக தலைமையிலான கூட்டணி, தங்களுக்கு 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறியும்,சிபு சோரனை ஆட்சியமைக்க கவர்னர் சையது ராஸி அழைத்தார்.
ஆனால் சிபு சோரனால் போதி எம்எல்ஏக்களின் ஆதரவைத் திரட்ட முடியவில்லை. இந்நிலையில் சிபு சோரன் அரசுடிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அர்ஜூன் முண்டா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிஅரசு பதவியேற்றது.
இன்று அர்ஜூன் முண்டா, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் அவர் வென்றார்.
அதே போல சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் நடந்தது. ஆளும் கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த இந்தர் சிங் நாம்தாரியும், அவரை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், ராஷ்ட்ரீயஜனதா தளத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளரான அன்னபூர்ணா தேவியும் சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்டனர்.
சபாநாயகர் தேர்தல் குரல் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோச்சார்எம்எல்ஏக்களின் கடும் எதிர்ப்புக்ணுடையே நாம்தாரி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வான கமலேஷ் குமார் சிங், மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர், இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அதே போல சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் 79 பேரில் 40 பேரின்ஆதரவைப் பெற்று அரசு வாக்கெடுப்பில் வென்றது. காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியைச் சேர்ந்த39 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications