ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய கண்ணன் எதிர்ப்பு
பாண்டிச்சேரி:
ஊழல் கறை படிந்த புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக் கூடாது என்று காங்கிரஸ்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து ரங்கசாமிக்குஎதிராக கருத்துக்களைக் கூறி வருகிறார் கண்ணன். புதுவையில்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரங்கசாமி பட்ஜெட்டைத் தாக்கல் செய்யக் கூடாது. அப்படி அவர் பட்ஜெட்டைத் தாக்கல்செய்ய அனுமதித்தால், அது, அவர் செய்யும் ஊழல்களுக்கு அங்கீகாரம் வழங்கியது போலாகி விடும்.
பொதுப்பணித்துறை முதல் பல்வேறுதுறைகளில் ரங்கசாமி ஊழல் செய்துள்ளார். இத்தனை ஊழல்களையும் நான் ஆதாரத்துடன்வெளிப்படுத்தியுள்ளேன். இதற்குப் பிறகும் ரங்கசாமி மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், ஊழலுக்குகாங்கிரஸ் மேலிடம் துணை போவதாகவே அர்த்தம்.
ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்தால், அவருக்கு எதிரான எனது போராட்டத்தை நான் தீவிரப்படுத்த வேண்டியதுவரும்.
காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தவறான முறையில் வழி நடத்தப்படுகிறது. ஜார்க்ண்ட், கோவா, பீகார், பாண்டிச்சேரிவிவகாரங்களைப் பார்த்தாலே இது புரியும். தவறான வழிகாட்டுதலால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் தான்பாதிக்கப்படுகிறது என்றார் கண்ணன்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications