ஆசிரியை மாயமான வழக்கு: அதிமுக எம்எல்ஏவுக்கு தொடர்பில்லை - ஜெ
சென்னை:
கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆசிரியை மீனாட்சி காணாமல் போன விவகாரத்தில் அதிமுக எம்.எல்.ஏவும் மாஜிஅமைச்சருமான பாப்பா சுந்தரத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போய் ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. இந்தக் கடத்தலில் அதிமுகஎம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கை போலீசார் மந்தகதியில் விசாரித்து வந்தனர். அத்தோடு மனைவி காணாமல் போனதாக புகார் கொடுத்தமீனாட்சியின் கணவரையே விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்து வந்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தை நாடினார் மீனாட்சியின் கணவர். மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் பேரில் சிபிசிஐடிபோலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் போலீஸாரின் செயல்பாடுகள் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி இந்த விவகாரத்தைக் கிளப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரமோ அல்லது அவரது உறவினர்களோ இந்தவழக்கில் சம்பந்தப்படவில்லை. பாப்பா சுந்தரத்திற்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளது என்று கூற எந்தவிதமான ஆதாரம்இல்லை என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications