தண்டவாளத்தில் தலை வைத்தால் வீரனா? ஜெ. மீண்டும் சீண்டல்
சென்னை:
தண்டவாளத்தில் தலை வைத்துப் படுப்பவர் எல்லாம் வீரனாக முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும்கருணாநிதியை கிண்டலடித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதாகுறுக்கிட்டுப் பேசுகையில்,
கடந்த 5.3.2005ம் தேதியன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பொறுக்கிகள்ஒட்டியிருப்பார்கள் அல்லது போலீஸார் ஒட்டியிருப்பார்கள் என்று பதிலளித்துள்ளார்.
காவல்துறையினரை இழிவாகவும், தரக்குறைவாகவும் விமர்சிப்பது கருணாநிதிக்குப் புதிதல்ல, அது அவரதுஇயல்புதான். 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த புதிதில், காவல்துறையினர் குறித்து அவர் கருத்துத்தெரிவிக்கையில், காவல்துறையினரின் ஈரல் பாதி கெட்டுப் போய் விட்டதாக விமர்சித்தார்.
வீரத்திலும், தீரத்திலும் சிறந்தது தமிழ்நாடு என்ற உண்மையை சமீபத்தில் நிரூபித்தது வீரப்பன் வதம். அவனுக்கும்சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள். பொது நலத்துக்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடுபவர்கள்வீரர்கள்.
ஆனால் தங்கள் குடும்பத்துக்காக, குலவிளக்கு கோலோச்ச பலரைப் பலி கொடுக்கலாம் என்று திரிபவர்கள் எல்லாம்வீரர்களாக முடியாது.
செஞ்சிக் கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜா ஆக முடியாது என்பது பழமொழி.
நான் ஒரு புது மொழி சொல்கிறேன். தண்டவாளத்தில் தலை வைத்துப் படுப்பவர்கள் எல்லாம் வீரனாக முடியாதுஎன்று கூறினார் ஜெயலலிதா.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications