விரைவு நீதிமன்றங்களின் ஆயுட்காலம் முடிகிறது!
சென்னை:
தமிழகத்தில் அமைக்கப்பட்ட 49 விரைவு நீதிமன்றங்களின் ஆயுட்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைவதால்அங்கு நடந்து வரும் வழக்குகளின் நிலை குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்களைதொடங்க கடந்த 2001ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 2001ம் ஆண்டு டிசம்பர் 21ம்தேதி மாவட்டங்கள் தோறும் விரைவு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன.
தமிழகத்தில் மொத்தம் 49 விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் விரைவுநீதிமன்றம் கிடையாது. இந்த விரைவு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டுதீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேங்கிக் கிடந்த வழக்குகள் பெருமளவில் குறைய விரைவு நீதிமன்றங்கள்மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
2005ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை இதன் ஆயுட்காலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்தபிப்வரி மாதம் மத்திய அரசு வெளியிட்ட ஒரு உத்தரவில் இதற்கான ஆயுட்காலம் மார்ச் 31ம் தேதியாககுறைக்கப்பட்டது.
இதனால் விரைவு நீதிமன்றங்களின் எதிர்காலம், அதில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலையும்கேள்விக்குறியாகியுள்ளன. இன்னும் 15 நாட்களுக்குள் விரைவு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளவழக்குகளை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் விரைவு நீதிமன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படாததே, அவற்றின் ஆயுள்காலம்நீட்டிக்கப்படாததற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications