குண்டு வெடித்து இறந்த மாணவி குடும்பத்துக்கு ஜெ. நிதியுதவி
சென்னை:
சேலம் வைஸ்யா கல்லூரியில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பயிற்சியின்போது தவறுதலாக அந்த குண்டு வெடித்ததில்பலியான மாணவியின் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 1 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறுகையில், சேலம்வைஸ்யா கல்லூரியில், வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் செயல் திட்ட விளக்கத்தின்போது எதிர்பாராத விதமாக குண்டுவெடித்தது. இதில் 3 மாணவிகள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த மாணவி தீபலட்சுமியின் குடும்பத்தினருக்கு எனதுஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீப லட்சுமியின் குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் இழப்பீட்டுத் தொகையாகவழங்க உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த மற்ற 2 மாணவிகளுக்கும் நல்ல சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
நிராகரிக்கப்பட்ட உரிமை மீறல் பிரச்சினை:
முன்னதாக தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மீது திமுக கொறடா, புகழேந்தி உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்தார்.
கேள்வி நேரத்துக்குப் பின் புகழேந்தி எழுந்து, முதல்வர் ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பினேன். அதுஎன்னவாயிற்று என்றார். அதற்குப் பதிலளித்த சபாநாயகர் காளிமுத்து, அதுகுறித்து ஏற்கனவே பதில் அளித்தாகி விட்டது, அந்தப்பிரச்சினை முடிந்து விட்டது என்றார்.
இதனால் ஏமாற்றமடைந்த புகழேந்தி மேலும் பேசாமல் அமர்ந்துவிட்டார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications