சுனாமி: திரும்பி வந்த மகன்- அரசிடம் பணத்தை திருப்பி தந்த பெற்றோர்
நாகப்பட்டனம்:
சுனாமியால் காணாமல் போன தங்களது மகன் திரும்பி வந்ததால், அவனுக்காக தரப்பட்ட நிவாரண நிதியை திருப்பித் தந்துகலெக்டரின் பாராட்டைப் பெற்றனர் அவனது பெற்றோர்.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் ஜெயக்குமார். அவரது மனைவிராஜவள்ளி. இவர்களது மகன் உதயகுமார்.
டிசம்பர் 26ம் தேதி வீசிய சுனாமி அலைத் தாக்குதலின்போது உதயக்குமார் காணாமல் போய் விட்டான். தங்களது மகன்இறந்திருப்பான் என்று கருதி ஜெயக்குமார் தம்பதி நிவாரணம் கோரி தமிழக அரசிடம் மனு செய்திருந்தனர்.
அவர்களுக்கு சுனாமி நிவாரண நிதியின் கீழ் ரூ 1 லட்சம் வழங்கப்பட்டது. அந்த நிதியை செலவு செய்யாமல் ஜெயக்குமார்தம்பதியினர் அப்படியே வைத்திருந்தனர்.
இந் நிலையில் சுனாமியன்று காணாமல் போன உதயக்குமார் திடீரென திரும்பி வந்தான். இறந்து போனதாக கருதிய தங்களதுமகன் உயிருடன் திரும்பி வந்ததைப் பார்த்ததும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர் ஜெயக்குமார் தம்பதியினர்.
அவனையும் அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் ஓடி வந்தனர்.
தங்களது மகன் திரும்பி வந்து விட்டதாகவும், அவனுக்காக கொடுக்கப்பட்ட நிவாரண நிதியை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும்கூறி ரூ. 1 லட்சம் பணத்தைத் திருப்பித் தந்தனர். இந்தத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்குமாறும் அவர்கள்கோரிக்கை வைத்தனர்.
அவர்களது நல்ல மனதை கலெக்டர் ராதாகிருஷ்ணன் வெகுவாகப் பாராட்டியதோடு, உதயகுமாரின் கல்விக்காக அரசிடம் இருந்துஉதவி ஏதும் தேவையென்றால் தன்னை அணுகுமாறு அவர்களிடம் கூறி அனுப்பினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications