சேலம் குண்டுவெடிப்பு: மாணவி பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்
சேலம்:
சேலம் வைஸ்யா கல்லூரியில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மாணவி, அறுவைச்சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்.
இக் கல்லூரியில் கடந்த 11ம் தேதி வெடிகுண்டு செயலிழிப்பு தொடர்பான விளக்க நிகழ்ச்சி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில், 3 மாணவிகள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தீபலட்சுமி என்பவர்இறந்தார்.
ஆரோக்கிய ரோஸ் மேரி மற்றும் நிஷா பானு ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் நிஷா பானுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
அவரது மூளைப் பகுதியில் குண்டுத் சிதறல்கள் ஊடுறுவியுள்ளது. அவற்றை அகற்ற டாக்டர்கள் முயன்றனர். அது முடியாமல்போகவே அவரை பெங்களூர் கொண்டு சென்று அங்குள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்த்து அறுவைச் சிகிச்சை செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு நிஷா பானு பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாகஅறுவை சிகிச்சை செய்யப்பட்டு துகள்கள் அகற்றப்படவுள்ளன.
இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேஷ் தொடர்ந்து நான்காவது நாளாகஇன்றும் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 காவலர்கள் பணி இடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
ரோஸ் மேரி நலமாக இருப்பதாகவும், அவருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications