திசைமாறும் ஜெயேந்திரர் வழக்கு: போலீசுக்கு நீதிபதி எச்சரிக்கை
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் தங்களது வரம்பை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றனர் என்றுசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி. சுப்பிரமணியம் கடுமையாக கண்டித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் மீதான வழக்கைநடத்துவதற்கு நிதியுதவி அளிக்கக் கோரி சங்கரமட இணையதளம் மூலம், பிரபல சங்கர நேத்ராலயா மருத்துவமனை இருதவியல்நிபுணர் டாக்டர் பாஸ்கரன் அறிவிப்பு வெளியிட்டு நிதி வசூல் செய்து வந்தார்.
இதையடுத்து அவரை விசாரணைக்கு வருமாறு கூறி காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் சம்மன் அனுப்பினர். இதை எதிர்த்துசென்னை உயர்நீதிமன்றத்தில் பாஸ்கரன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் போலீசாரின் நடவடிக்கையால்கடும் கோபம் அடைந்தார்.
யாரிடமிருந்தாவது, ஏதாவது தகவல் பெற வேண்டும் என்றால், நேரடியாக அவரிடம் சென்று விசாரித்துக் கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு அநாவசியமாக சம்மன் அனுப்புவது தேவையில்லாத வேலை மட்டுமல்ல அது அர்த்தம் இல்லாத செயல்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறது தமிழக அரசு என்று நினைக்கிறேன். வழக்கிலிருந்து பாதை மாறிப் போவதைதனிப்படை போலீஸார் தவிர்க்க வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் மட்டும் கருத்தாக இருந்தால் நல்லது, அதைவிடுத்து தேவையில்லாத வகையில் விசாரணையை விரிவுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தனிப்படையினரின் போக்கு எனக்குப் புரியவில்லை, அவர்களது செயல்பாடுகள் இப்படியே தொடர்ந்தால் சங்கரமடம்தொடர்பான எந்த மனுவையும் நான் விசாரிக்க மாட்டேன். சங்கர மடம் தொடர்பான அனைத்து மனுக்களும் என்னிடம்தான்விசாரணைக்கு வருகின்றன.
அரசுக்கு ஆதரவாக நான் ஒரு உத்தரவையும் தரவில்லை என்று பின்னர் அரசுத் தரப்பு புகார் கூறக் கூடும். எனவே இந்தவழக்குகளிலிருந்து நான் விலகிக் கொள்ள விரும்புகிறேன் என்றார் கோபமாக.
இதனால் நீதிமன்ற ஹாலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், டாக்டர் பாஸ்கரனை கைதுசெய்ய மாட்டோம் என உறுதிமொழி அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு நீதிபதிஒத்திவைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications