கலவையில் நிரந்தரமாக தங்குகிறார் ஜெயேந்திரர்!
கலவை:
இனிமேல் காஞ்சிபுரம் திரும்பப் போவதில்லை, கலவை மடத்திலேயே தங்கப் போவதாக ஜெயேந்திரர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதான ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையான பிறகு காஞ்சிபுரம் வராமல் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ளகலவையில் உள்ள சங்கர மடத்திற்கு சென்று தங்கினார்.
அதுவரை கவனிப்பின்றி கிடந்த கலவை மடம் ஜெயேந்திரர் வருகையால் புதுப் பொலிவு கண்டது. கூடுதலாக சில அறைகளும், சமையல் கூடங்களும், சுற்றுச்சுவரும் கட்டப்பட்டன. புதிய வசதிகளும் மடத்தில் ஏற்படுத்தப்பட்டன.
இதனால் ஜெயேந்திரர் இனிமேல் கலவை மடத்தில்தான் தங்குவார் என்று பேச்சு எழுந்தது. ஆனால் இதை ஜெயேந்திரர் தரப்பு அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கவில்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.
இந்த நிலையில், ரவிசுப்ரமணியம் மிரட்டப்பட்ட வழக்கு, திருக்கோட்டியூர் மாதவன் வழக்கு ஆகியவற்றில் முன்ஜாமீன் பெற்றுள்ள ஜெயேந்திரர்,உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சனிக்கிழமை காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவிற்கு வந்தார். அங்கு தனிப்படையினர்மு ன்பு ஆஜராகி கைநாட்டுப் பதிவு செய்தார்.
பின்னர் மீண்டும் கலவை திரும்பிய ஜெயேந்திரர், முதல் முறையாக பக்தர்கள் மு ன்னிலையில் பேசினார். சிறிது நேரமே ஜெயேந்திரர் பேசினாலும் அவரதுபேச்சு பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயேந்திரர் பேசுகையில், இனிமேல் கலவையில்தான் தங்கப் போகிறேன். இங்கே நிறைய பழமையான கோவில்கள் உள்ளன. அவற்றையெல்லாம் புதுப்பிக்கவேண்டும். அதை செய்யப் போகிறேன். நிறைய புதிய கோவில்களையும் கட்ட உத்தேசித்துள்ளேன்.
பொதுமக்களுக்கு எனது ஒரே வேண்டுகோள், ஒற்றுமையாக இருங்கள், வேற்றுமையை மறங்கள், ஒருங்கிணைந்து செயல்படுங்கள், பகவான் உங்களுக்குத்துணையாக இருப்பார் என்று பேசினார் ஜெயேந்திரர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications