சு.சுவாமிக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு வழக்கறிஞர் கா.துரைசாமி குறித்து தவறான தகவலை கூறியதற்காக தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்குஅமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு வழக்கறிஞர் கா.துரைசாமி,விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி கூறியுள்ளார். இது முற்றிலும்அபத்தமானது, விஷமத்தனமானது.

சுவாமி குறிப்பிடும் நபர், அரசு வழக்கறிஞர் துரைசாமி அல்ல, மாறாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டநளினிக்காக ஆஜராகிய எஸ்.துரைசாமி ஆவார்.

ஒருவரை உயர் பதவிக்கு நியமிக்கும்போது அவர்கள் அந்தப் பதவிக்குத் தகுதியானவர்களா என்பதை தீர ஆராய்ந்துதான் தமிழகஅரசு எந்த நடவடிக்கையும் எடுக்கும்.

இப்படி இருக்கையில், இதுபோன்ற திசை திருப்பும் வகையிலான செயலை சுவாமி இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+