சுனாமி: சென்னை மீனவர்கள் சிறப்பு யாகம்
சென்னை:
மீண்டும் சுனாமி தாக்குதல் ஏதும் ஏற்படாமல் தங்களைக் காக்க வேண்டி சென்னை காசிமேடு பகுதி மீனவர்கள் சிறப்பு யாகம்மற்றும் பூஜை நடத்தினர்.
சுனாமி தாக்கிய பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. மீன்வர்கள் மீன்பிடித் தொழிலில் மீண்டும்தீவிரமாகியுள்ளனர்.
இந் நிலையில், சுனாமி அலைத் தாக்குதல் மீண்டும் வரக் கூடாது என்று வேண்டியும், மீனவர்கள் மனதிலிருந்து அச்சம் நீங்கவேண்டியும், சென்னை காசிமேடு பகுதியில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இந்தயாகம் நடந்தது.
20 புரோகிதர்கள் கலந்து கொண்டு யாகம் வளர்த்தார்கள். நிறைய மீன்கள் கிடைக்கவும் பூஜை செய்யப்பட்டது.
சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். பின்னர் மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடித் தொழிலை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.அவருடன் ஆட்சித் தலைவரும் உடன் சென்றார்.
அமைச்சர் ஜெயக்குமார் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுனாமி நிவாரணத்துக்கு ரூ. 901 கோடி:
இந் நிலையில் சட்டசபையில் இன்று 2004-05ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல்செய்தார். அதில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள மாநில அரசு இதுவரை ரூ. 901.88கோடியை ஒதுக்கியுள்ளது என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications