தமிழகத்தில் நக்சலைட் ஊடுறுவலை தடுக்க தீவிர கண்காணிப்பு
திருவள்ளூர்:
ஆந்திராவிலிருந்து நக்சலைட்டுகள் தமிழக எல்லைக்குள் ஊடுறுவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் திருவள்ளூர், வேலூர் மாவட்டஎல்லைப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கூடுதல் டிஜிபி கே.வி.எஸ். மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்பாடி, ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் விடிய விடிய வாகன சோதனை நடத்தப்படுகிறது.
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குப் பிறகே உள்ளேஅனுப்பப்படுகின்றன. சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. வேலூர் மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
ஆந்திரா, கநநிாடகாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிக இணைப்புச் சாலைகள் உள்ளன.எனவே அந்த மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக 10 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்திப்பாக்கம், பாகனூர், பேரிகை, அஞ்சட்டி, ஜூஜுவாடி, பர்கூர், கனமூர், ஒப்பதவாடி, வேப்பணாப்பள்ளி,குருவிநாயணப்பள்ளி ஆகிய இடங்களிலும் பெரிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் முதல் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த மாவட்டங்களில் தீவிர போலீஸ் கண்காணிப்பு காரணமாக நக்சலைட் ஊடுறுவல் இல்லை.
ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் தலா ஒரு சப் இன்ஸ்பெக்டர், 8 போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய போலீஸார்24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் மூர்த்தி.












Click it and Unblock the Notifications