மோடி: இந்திய-அமெரிக்க உறவில் சிக்கலில்லை
வாஷிங்டன்:
மோடிக்கு விசா மறுக்கப்பட்டது ஒரு தனிப்பட்ட விவகாரம் தான். இரு நாட்டு உறவுகளுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஆடம் எரேலி தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசின்கோரிக்கையே ஏற்று விசா வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்வதாக முதலில் அமெரிக்கா கூறியது.
ஆனால் மோடிக்கு விசா வழங்க முடியாது என்று நேற்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஆடம் எரேலி கூறுகையில், இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது என்பதை மறுக்க முடியாது.
குஜராத் முதல்வர் மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான விவகாரம் ஒரு தனிப்பட்ட விஷயமாகும். இதில் இரு நாட்டுஉறவுக்கு எந்த தொடர்பும் இல்லை.
விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் விசா வழங்குவது என்பது இந்தியா-அமெரிக்க உறவு வளையத்திற்குள் வருவது அல்ல.அமெரிக்காவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தான் மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு குஜராத் மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளது. ஏனென்றால் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர்இங்கு பல முக்கியமான துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
மாதம் தோறும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர்க்கு விசா வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு விசா மறுக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக அறிந்தோம். ஆனால் அந்த அரசுஆட்சியில் இருக்கும் போது தான் அமெரிக்க - இந்தியா இடையே கூடுதல் நட்புறவு ஏற்பட்டது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications