அரசு மதுக் கடைகள் மூலம் ரூ. 5,441 கோடிக்கு உ.பா விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசே நடத்தும் மதுக் கடைகள் மூலம் (டாஸ்மாக் கடைகள்) ரூ. 1,514 கோடி அளவுக்கு கூடுதலாக உற்சாக பான விற்பனைநடந்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

தமிழக சட்டசபையில் மது விலக்கு ஆயத்தீர்வை மற்றும் வருவாய்த்துறைக்கான மானியக் கோரிக்கைகளை அமைச்சர் ஓ.பி.தாக்கல் செய்து பேசினார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில் தனியார் கடைகள் மதுபான விற்பனையை மேற்கொண்டபோது, டாஸ்மாக் கடைகளின் மூலம் ரூ.3,877 கோடி அளவுக்கு மட்டுமே மது பான விற்பனை இருந்தது.

தற்போது அரசே நேரடியாக நடத்தும் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் தொகை ரூ. 5,441கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒராண்டுகால மது விற்பனையின் மூலம் கூடுதலாக கிடைத்துள்ள தொகை ரூ. 1,564கோடியாகும்.

இந்த 11 மாத காலத்தில் மட்டும் கூடுதலாக ரூ. 1,514 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. நடப்பாண்டில் மது பானவிற்பனை அளவு 176.16 லட்சம் பெட்டிகள் ஆகும். முந்தைய நிதியாண்டில் இது 143.06 லட்சம் பெட்டிகளாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் கடந்த 11 மாதங்களில் மட்டும் 33.10 லட்சம் பெட்டிகள் கூடுதலாக விற்றுள்ளது. இது மகத்தானசாதனையாகும்.

தமிழகத்தில் 4,016 மதுபான கடைகளில் பார் வசதி உள்ளது. டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் 33,600 பணியாளர்கள்பணியமர்த்தப்பட்டுள்ளனர். 21 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்க தடை செய்யப்பட்டுள்ளது என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பேசுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்தில் தான் அதிக அளவு மது விற்பனையாகிறது. அங்குபூரண மது விலக்கை ஆளும் காங்கிரஸ் கொண்டு வருமா? என்று கேட்டார்.

தொடர்ந்து பேசிய ஞானசேகரன், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதியாக தலைவர் மற்றும் 11 உறுப்பினர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பதையே அதிமுக அரசு நிறுத்திவிட்டது. இந் நிலையில்தேர்வாணையத்துக்கும் எந்த வேலையும் இல்லை என்றார்.

அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்த வேலையும் செய்யாமல் இல்லை. இதன் மூலமாகத்தான் அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2,322 டாக்டர்களை இந்த ஆணையம் தேர்வு செய்துள்ளது.இவர்கள் அரது மருத்துவமனைகளில் பணியில் சேர்க்கப்படவுள்ளார்கள்.

மேலும் அரசு ஊழியர்கள் தொடர்பாக பல யோசனைகளை இந்த ஆணையம் வழங்கி வருகிறது. இதனால் அரசுப் பணிக்கு ஆள்எடுப்பதை நிறுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டுவது தவறு என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+