திருச்சி மொழிப்போர் மாநாட்டில் போராட்ட அறிவிப்பு
திருச்சி:
திருச்சியில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் அறிவிப்பு மாநாட்டில் 2 கட்ட போராட்டங்களை டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
திருச்சியில் நேற்று 3வது மொழிப்போர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட டாக்டர். ராமதாஸ் 2 கட்ட போராட்ட அறிவிப்புகளைவெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் ஆகியவற்றில் பெயர் மற்றும்விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை தரவேண்டுமென்ற தமிழக அரசின் அரசாணைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போராடி வருகிறது.
ஆனால் இதை இதுவரை யாரும் பொருட்படுத்தவில்லை. அரசும் இதை நடைமுறைப் படுத்துவதில் எந்த ஆர்வமும்காட்டவில்லை. நாங்கள் மீண்டும் இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம்.
இதன் பின்னரும் எங்களது வேண்டுகோளை புறக்கணித்தால் தமிழை பாதுகாக்கும் வகையில் மே 23ம் தேதி தமிழகம் முழுவதும்வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளில் உள்ள பிறமொழிப் பெயர்களை தார்பூசி அழிப்பது என இதன் மூலம்தெரிவித்துக் கொள்கிறோம்.
2வது கட்டமாக தமிழ் பாதுகாப்பு இயக்கம் முன் வைத்திருக்கும் 10 கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழகஅரசையும், இந்திய அரசையும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.
இந்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுமேயானால் நவம்பர் 1ம் தேதி லட்சக்கணக்கானோர் சிறை செல்லும் வகையில்தமிழகத்தின் அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தி சிறை செல்வோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications