பெங்களூர் டெஸ்ட்: பாக். அபார வெற்றி
பெங்களூர்:
பெங்களூரில் நடைபெற்ற இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிவடைந்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. கொல்கத்தாவில்நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந் நிலையில் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிபெங்களூரில் கடந்த 24ம் தேதி தொடங்கியது.
கடந்த 2 போட்டிகளிலும் டாசில் தோற்ற பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம், இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில்பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 570 ரன்களைக் குவித்தது.
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 449 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இரண்டாவது களமிறங்கிய பாகிஸ்தான் 2 விக்கெட்இழப்பிற்கு ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 383 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கட்இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது.
மிகவும் பரபரப்பான நிலையில் இன்று இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக்கும், காம்பிரும் களமிறங்கினர். இந்தியாவெற்றி பெறாவிட்டாலும் "டிராவாவது செய்யும் என்று தான் ரசிகர்கள் கருதியிருந்தனர்.
ஆனால் பாகிஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்துவெளியேறினர். இறுதியில் 214 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் பாகிஸ்தான் 168 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் இந்த வெற்றியால் டெஸ்ட் தொடர்1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கும் இடையே ஒரு நாள் போட்டித் தொடர் ஏப்ரல் 2ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது.
டெண்டுல்கர் சாதனை:
இதற்கிடையே டெஸ்ட் போட்டியில் இந்தியாவிலேயே அதிக ரன்கள் எடுத்திருந்த கவாஸ்கரின் சாதனையை டெண்டுல்கர் இன்றுமுறியடித்தார்.
டெஸ்ட் போட்டியில் முதலில் 10,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் சுனில் கவாஸ்கர். இவர் மொத்தம்10,122 ரன்களை எடுத்திருந்தார். இதற்குப் பிறகு இவரது சாதனையை ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக்,மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த லாரா ஆகியோர் முறியடித்தனர்.
10,000 ரன்களை டெண்டுல்கர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கடந்தார்.
இன்று, கவாஸ்கரின் 10,122 ரன்களை டெண்டுல்கர் கடந்து இந்தியாவிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவர்என்ற சாதனையைப் படைத்தார்.
தற்போது ஆலன் பார்டர் 11,174 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications