பஹ்ரைனில் இந்திய தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை: ஊழியர்கள் வன்முறை போராட்டம்
துபாய்:
பஹ்ரைனில் இந்தியத் தொழிலாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விசாரணை நடத்தக் கோரி 400 இந்தியத் தொழிலாளர்கள் வன்முறைப் போராட்டத்தில் இறங்கினர்.
பஹ்ரைனில் ஒரு ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வந்தார் ஆந்திர மாநிலம் திருப்பதியைச்சேர்ந்த மது பாபு (25). எட்டு மாதங்களுக்கு முன் இவர் பணியில் சேர்ந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜே.சி. பென்னி ஜவுளி நிறுவனத்துக்கு உடைகளைத் தயாரித்து வருகிறது இந்த ரெடிமேட் ஆலை.
இந்த ஆலையில் தொழிலாளர்களுக்கு மிகுந்த வேலைப்பளு தரப்பட்டு வருவதாகத் தெரிகிறது. சமீபத்தில் 16தொழிலாளர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் தரப்பட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த இரு வாரங்களாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த மது, நோயுடன் பணியாற்றநிர்பந்திக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கடந்த சனிக்கிழமை ஆலையின் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு அறையின் சீலிங்கில் இருந்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் மது. அவரது தற்கொலைக்கு அந்த ரெடிமேட் ஆலையில் தரப்பட்ட பணி ரீதிலியான தொல்லையே காரணம்என்று தெரிகிறது.
பணியில் மிகவும் துன்புறுத்தப்பட்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்தக்கோரியும் சுமார் 400 தொழிலாளர்கள், பெரும்பாலும் இந்தியர்கள், போராட்டத்தில் குதித்தனர்.
ரெடிமேட் ஆலையின் ஒரு பகுதியை அவர்கள் அடித்து நொறுக்கினர். ஆலையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களையும்உடைத்தனர்.
இதையடுத்து அந்த ஆலை தாற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.
மதுவின் சாவு விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு பஹ்ரைன் தொழிலாளர்துறை அமைச்சர் மஜீத் அல்-அல்லாவிக்குபஹ்ரைன் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிடுமாறு ரெடிமேட் ஆலையின் ஊழியர்கள் இந்திய மற்றும் வங்கதேச தூதரங்களிடம் கோரிக்கைக்கடிதங்களை வழங்கியுள்ளனர்.
இந்த சாவு விவகாரத்தை குடிபெயர்ந்த தொழிலாளர் நலக் கமிட்டியும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications