காஞ்சி மடத்துக்கு ஜெயேந்திரர் திடீர் வருகை!
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் இன்று அதிகாலை திடீரென சங்கர மடத்துக்கு வந்தார். 143 மாட்களுக்குப் பின் மடத்துக்கு வந்த அவரிடம்ஏராளமான பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ஜெயேந்திரர் கலவை மடத்தில் தங்கியுள்ளார். இந்த வழக்கில் விசாரணைமுடியும் வரை அவர் காஞ்சி மடத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையிலும் ஜெயேந்திரர் காஞ்சி மடம் வருவதைத் தவிர்த்தே வந்தார்.
தொடர்ந்து அவர் கலவை மடத்திலேயே தங்கியுள்ளார். அங்கேயே பூஜைகளை நடத்தி வரும் ஜெயேந்திரர் பக்தர்களையும்சந்தித்து வருகிரார்.
இந் நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் கலவை மடத்திலிருந்து வேனில் புறப்பட்டார். வேன் காஞ்சிபுரத்துக்கு வந்தது.சங்கர மடத்தின் அருகே புதிதாகத் தொடங்கப்பட்டுள் இலவச ஆயுர்வேத மருத்துவமனையை திறந்து வைத்த ஜெயேந்திரர்,யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென காஞ்சி மடத்துக்குள் சென்றார்.
ஜெயேந்திரர் வருவது ஓரிரண்டு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்தத் தகவல்பக்தர்களிடையே தீ போல் பரவிவிட அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டுவிட்டனர்.
மடத்து வாசலில் அவருக்கு மிகச் சிறந்த வரவேற்பளித்தனர். 143 நாட்களுக்குப் பின் மடத்துக்குள் வந்த ஜெயேந்திரரை மடத்துஊழியர்கள் வேதமந்திரங்கள் முழங்க வரவேற்றனர். பலரது கண்களில் கண்ணீர்.
நேராக மகாபெரியவரின் அதிஷ்டானத்துக்குச் சென்ற ஜெயேந்திரர் அங்கு அர்ச்சனை நடத்தினார். பின்னர் மடத்தின் ஒவ்வொருபகுதியையும் சென்று பார்வையிட்ட ஜெயேந்திரரின் முகத்தில் நீண்ட நாட்களாய் மறைந்து போயிருந்த புன்னகைதிரும்பியிருந்ததைப் பார்க்க முடிந்தது.
5.45 மணி வரை சுமார் முக்கால் மணி நேரம் மடத்தில் இருந்த ஜெயயேந்திரர் பூஜையும் நடத்திவிட்டு காமாட்சி அம்மன்கோவிலுக்குச் சென்றார். வழியில் கவுசிகேஸ்வரர் சன்னதியில் தானே தீபாராதனை காட்டி பூஜை நடத்தினார்.
6 மணிக்கு காமாட்சி அம்மன் ஆலயத்தை அடைந்த ஜெயந்ேதிரருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் மிகச் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. பின்னர் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பால் அபிஷேகம் செய்த ஜெயேந்திரர் காமாட்சிஅம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார்.
அம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆதிசங்கரருக்கும் பால் அபிஷேகம் நடந்தது.
அம்மனுக்கு அன்னப்பாவாடை எனப்படும் கற்கண்டு கலந்த பொங்கல் படைத்து பூஜை செய்தார். 1 மணி நேரம் அம்மனுக்குஇந்தப் பூஜைகளை ஜெயேந்திரர் நடத்தினார்.
பூஜையைய முடித்துவிட்டு 7 மணிக்கு சுக்ரவார மண்டபத்தில் உள்ள மர பெஞ்சில் அமர்ந்தார். அங்கு அவரைக் காணக்கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அவரது காலில் விழுந்து கண்ணீர் பொங்க ஆசி பெற்றனர். அவர்களுக்கு பழம், பூ,கற்கண்டு வழங்கி ஆசி வழங்கிய ஜெயேந்திரர் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டார்.
10 நிமிடங்களில் ஆசி வழங்கி முடித்துக் கிளம்பிய ஜெயேந்திரரை நோக்கி அழைத்து வரப்பட்டது காமாட்சி அம்மன் கோவில்யானைக் குட்டி. அப்போது தனக்கு வாழைப் பழத்தை வழங்கிய யானைக் குட்டிக்கு ஆசி வழங்கிவிட்டு வேனில் ஏறி அமர்ந்தார்ஜெயேந்திரர்.
மீண்டும் கலவை மடத்துக்குப் புறப்பட்ட ஜெயேந்திரரின் கண்களில் நீர் துளிர்த்திருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications