போலீஸ் கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

விசாரணைக்காக கூட்டிச் செல்லப்பட்ட 17 வயது வாலிபரை போலீஸார் கடுமையாகத் தாக்கியதால் அவனது கல்லீரல்கிழிந்துவிட்டது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர் கனகம். கணவரை இழந்த இவர்கூலி வேலை பார்த்து பிழைத்து வருகிறார். இவரது 17 வயது மகன் ஜெபமணி.

இவரை அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை என்ற பெயரில் கண்மூடித்தனமாகத் தாக்கி கல்லீரலையே கிழித்துள்ளனர்.

இந்த நடுங்க வைக்கும் சம்பவம் குறித்து ஜெபமணி கூறுகையில்,

மார்ச் 11ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தக்கலை காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 போலீஸார் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச்சென்றனர். காவல் நிலைய லாக்கப்பில் என்னை அடைத்து வைத்தனர்.

சிறிது நேரம் கழித்து சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் அங்கு வந்தார். என்னை கடுமையாக தாக்கினார். குப்புறப் படுக்கச் சொல்லிமுதுகில் லத்தியால் கடுமையாக அடித்தார். அடி தாங்காமல் நான் மயக்கமடைந்து விட்டேன் என்றார்.

ஜெபமணியின் தாயார் கனகம் கூறுகையில், ஜெபமணிக்கு என்னவாயிற்றோ என்று பதறியடித் கொண்டு நான் போனபோது,அவன் குத்துயிரும், குலையுறுமாக கிடந்தான். அவனை அடித்து சிதைத்துப் போட்டிருந்தனர்.

போலீசாரிடம் கெஞ்சு, கூத்தாடி உடனே அவனை டாக்ஸி பிடித்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன்.

தக்கலை டாக்டர்கள் ஜெபமணியைப் பரிசோதித்து விட்டு உடனடியாக ஆசாரிப் பள்ளம் அரசு பொது மருத்துவமனைக்குக்கொண்டு செல்லுமாறு கூறினர். அதுவரை பென்சன் எங்களுடனேயே வந்தார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு தக்கலை டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்து, அவர்பாதியிலேயே இறங்கிக் கொண்டார்.

அதன் பின்னர் அரசு மருத்துவமனையில் ஜெபமணியை அட்மிட் செய்தேன். அங்கு அவனைப் பரிசோதித்த டாக்டர்கள்,கல்லீரலில் 2 இஞ்ச் அளவுக்கு கிழிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

எங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரெஜிமி என்பவரின் குடும்பத்துக்கும், எங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. சிலநாட்களுக்கு முன் எனக்கும், ரெஜிமி குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்னைத் திட்டியரெஜிமியைப் பார்த்து, பதிலுக்கு ஜெபமணி திட்டினான்.

இதை வைத்து தன்னை ஈவ் டீசிங் செய்ததாக ரெஜிமி, போலீஸில் கூறியுள்ளார். இந்தப் பொய் புகாரின் அடிப்படையில்ஜெபமணியை போலீஸார் அழைத்துக் கொண்டு போய் சித்திரவதை செய்துள்ளனர் என்றார் கனகம்.

ஆனால் அல்சர் காரணமாக ஜெபமணி அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாகவே அவனை மருத்துவமனையில் சேர்க்கநேர்ந்ததாகவும், போலீஸார் அவனை அடிக்கவில்லை என போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரவடிவேலு கூறியுள்ளார்.

2 நாட்கள் ஜெபமணியை காவல் நிலையத்தில் வைத்திருந்தபோதும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை எதையும் போலீசார் பதிவுசெய்யவில்லை என்று தெரிகிறது. கிட்டத்தட்ட சட்ட விரோதமாகவே அவரை லாக்-அப்பில் வைத்து ரெஜிமி தரப்பிடம் இருந்துவாங்கிய காசுக்கு வஞ்சம் வைக்காமல் கண்மூடித்தனமாக ஜெபமணியைத் தாக்கியுள்ளன காக்கிச்சட்டைகள்.

இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+