இன்றும் இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்
ஹாங்காங்:
இந்தோனேஷியாவில் நேற்றிரவு பயங்கர பூகம்பம் ஏற்பட்ட சுமத்ரா பகுதியில் இன்று மீண்டும் இ ரு அதிக சக்தி வாய்ந்தநிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
நேற்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.7 என்ற அளவுக்குப் பதிவான நிலையில் இன்று 5.7, 5.8 என்ற அளவில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.7 என்ற அளவில் இருந்தது. நேற்றையநிலநடுக்கம் ஏற்பட்ட பாண்டா அச்சேவுக்கு 620 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.
அடுத்த 6 மணி நேரத்தில் இரண்டாவது அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.8 என்றஅளவில் பதிவானது. சுமத்ராவுக்கு 350 கி.மீ. தொலைவில் இதன் மையம் இருந்தது.
இத் தகவலை ஹாங்காங் நிலவியல் மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அப் பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்டவண்ணம்உள்ளன.












Click it and Unblock the Notifications