ஏட்டிக்கு போட்டி: ஜெயலட்சுமி மீது பணமோசடி வழக்கு
மதுரை:
தன்னைக் கொல்ல முயன்றதாக வழக்கறிஞர் மீது ஜெயலட்சுமி புகார் கொடுத்ததைடுத்து, ஜெயலட்சுமி மீது வழக்கறிஞர் பணமோசடி புகார் கொடுத்துள்ளார்.
இதன் பேரில் ஜெயலட்சுமி மீது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸார் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜெயலட்சுமி விவகாரத்தை வெளிஉலகுக்கு கொண்டு வந்ததில் பெரும் பங்கு வழக்கறிஞர் அழகர்சாமிக்கு உண்டு. ஆனால்இருவருக்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜெயலட்சுமியின் வழக்கில் தற்போது வழக்கறிஞர்களான வெங்கடேசன், ஓம்சேர்மபிரபு ஆகியோர் ஆஜராகிவருகின்றனர்.
இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கறிஞர் அழகர்சாமி தன்னை வீடுபுகுந்து கழுத்தை நெரித்து கொலை செய்யமுயன்றதாக ஜெயலட்சுமி மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸில் புகார் கொடுத்தார்.
அழகர்சாமியின் தாக்குதலில் காயமடைந்த ஜெயலட்சுமி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குஅவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி கூறுகையில், எனது எதிராளிகளான ஏட்டு கண்ணன் ஆகியோரிடம் எனக்குத் தெரியாமல்அழகர்சாமி ரகசியமாக தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.
இரண்டு பேரிடம் பணமும் அவர் வாங்கியுள்ளார். உடனே அவரை அழைத்து எனது வழக்கை நீங்கள் நடத்த வேண்டாம் என்றுகூறிவிட்டேன். அவர் என்னிடம், உன்னை நம்பி பல பேரிடம் பணம் வாங்கியுள்ளேன் என்று கூறி என்னிடம் பேரம் பேசினார்.அதற்கு நான் மறுத்து விட்டேன்.
இதனால் ஆத்திரமடைந்த அழகர்சாமி என்னுடைய வீட்டுக்கு இரவில் வந்து என்னை கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றார்.இந்த தாக்குதலுக்கு எனது பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரே உடந்தையாக இருந்துள்ளனர்.
அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு போலீசாரை நியமிக்க வேண்டும், இல்லாவிட்டால் எனக்கு இனிமேல்போலீஸ் பாதுகாப்பே தேவையில்லை. நடந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.
இதற்கிடையே தன்னுடைய பணம், நகைகளை ஜெயலட்சுமி பறித்துக் கொண்டதாக வழக்கறிஞர் அழகர் சாமி காவல் நிலையத்தில்புகார் கொடுத்துள்ளார். அதில்,
வழக்கு செலவுக்காகவும் ஜெயலட்சுமியின் செலவுக்காகவும் நகை, பணத்தை நான் கொடுத்தேன். அதை நான் திருப்பிக்கேட்டபோது அவரை நான் கொல்ல முயன்றதாக பொய் புகார் கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின்பேரில் மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் ஜெயலட்சுமி மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே வழக்கறிஞர் அழகர்சாமி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு கொடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications