அரசு பஸ்களுக்கு ரிலையன்ஸ் நிறுவன டீசல்: எல்லாம் அவர் செயல்?
சென்னை:
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து டீசல் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்போரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்டநிறுவனங்களிடம் இருந்து தான் தமிழக அரசு டீசல் வாங்கி வந்தது.
இந் நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தேவையான டீசலில் 5 சதவீதத்தை ரிலையன்ஸ் நிறுவனம் மூலமாக வாங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 1,300 தள்ளுபடி வழங்க ரிலையன்ஸ் முன் வந்துள்ளதால் ஏப்ரல் 1 முதல் 6மாதங்களுக்கு அவர்களிடம் டீசல் வாங்கப்படும்.
பரீட்ச்சார்த்தரீதியில் இந்த டீசல் வாங்கப்படுகிறது. பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் நமக்கு கிலோ லிட்டருக்கு ரூ. 200மட்டுமே தள்ளுபடி தருகின்றன. இதை ரிலையன்சுக்கு இணையாக உயர்த்தித் தருமாறு அந்த நிறுவனங்களிடம் பேசி வருகிறோம்.
அரசின் இந்தத் திட்டத்தை இடதுசாரிகளும் பாமகவும் எதிர்க்கின்றன. ஆனால், பாமகவைச் சேர்ந்த பொன்னுசாமிபெட்ரோலியத்துறை இணையமைச்சராக இருந்தபோது தான் பெட்ரோலிய விற்பனையில் இறங்க ரிலையன்சுக்கு லைசென்சேகிடைத்தது. இதனால் அவர்கள் இந்த விஷயத்தில் பேச தகுதியில்லை.
அதே போல அரசின் முடிவை விமர்சிக்க திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள்நாட்டின் தொலைத் தொடர்புத்துறையில் முக்கிய பங்காற்றப் போவதாக திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறனே கூறியிருக்கிறார்.
மேலும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்போரேசன் ஒன்றும் அரசு நிறுவனமல்ல. அதன் 15 சதவீத பங்குகள்தனியார் வசம் தான் உள்ளன. மேலும் பல சதவீத பங்குகளை விற்க மத்திய அரசும் முடிவு செய்துள்ளது என்றார் அமைச்சர்விஸ்வநாதன்.
தனியார் நிறுவனமான ரிலையன்சிடம் இருந்து டீசலை வாங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதில் பின்னணியில் ஏதோநடந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. மத்திய அமைச்சர் சரத்பவார் மூலமாக இந்த மெகா காண்ட்ராக்ட்டை ரிலையன்ஸ்நிறுவனம் லவட்டியதாகக் கூறப்படுகிறது.
சுனாமி நிவாரணப் பணிகள் தொடர்பான ஆலோசனை என்ற பெயரில் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் பலமுறைசந்தித்துப் பேசினார் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார்.
அப்போதுதான் ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனத்திடம் இருந்து தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் வாங்க முடிவுசெய்யப்பட்டதாக நக்கீரன் தெரிவிக்கிறது.
ஆனால், இந்த விவரம் வெளியில் கசிந்துவிட்டதால் இப்போதைக்கு 5 சதவீத டீசல் தேவையை மட்டும் ரிலையன்ஸ் மூலமாகவாங்கவும், இதை படிப்படியாக உயர்த்தி தேவையான டீசல் முழுவதையுமே ரிலையன்ஸ் மூலமாக வாங்கவும்முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications