அமெரிக்காவில் இந்தியர் குத்திக் கொலை !

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரது 2நண்பர்கள் படுகாயமடைந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் சிங்(வயது 20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவர் அமெரிக்காவில் குடியேறினார்.நியூஜெர்சியில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே உள்ள "ஓல்டு போஸ்ட் ஆபிஸ் அரங்கத்தில் வாஷிங்டன்பல்கலைக்கழக மாணவர்களின் ஆண்டு விழா நடந்தது. இதில் ரஞ்சித் சிங்கும் கலந்து கொண்டார்.

விழா முடிந்த பின் மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவர், ரஞ்சித் சிங்கை தன்னிடமிருந்தகத்தியால் பலமுறை குத்தினார். அவரை சிங்கின் நண்பர்கள் தடுக்க முயற்சித்தனர்.

அவர்களையும் அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டார்.

கத்திக் குத்தில் படுகாயமடைந்த ரஞ்சித் சிங் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ரஞ்சித் சிங் இறந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+