மொரீஷியசில் மன்மோகன் சிங்: 4 ஒப்பந்தங்கள்
போர்ட் லூயிஸ்:
இந்தியா- மொரீஷியஸ் இடையே தீவிரவாதத் தடுப்பு உட்பட 4 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
பிரதமர் மன்மோகன் சிங் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மொரீஷியஸ் சென்றார்.அவருடன் அவரது மனைவி குர்ஷரன்கெளர், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
தனி விமானத்தில் மொரீஷியஸ் தலைநகர் வந்த பிரதமருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மொரீஷியஸ் பிரதமர் பால் ரேமண்ட் பெரிங்கர் மற்றும் உயரதிகாரிகள் அவரை வரவேற்றனர். பிறகு அந்நாட்டு ராணுவவீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் சிங் ஏற்றுக்கொண்டார்.
இன்று தலைநகர் போர்ட் லூயிஸில் மன்மோகன் சிங் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பால் ரேமண்ட் பெரிங்கர் ஆகியோர்பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் சர்வதேச தீவிரவாத தடுப்பு, இருநாடுகளுக்கிடையே விமானப் போக்குவரத்தை அதிகரிப்பது ஆகியவையும் அடங்கும்.
இந்த புதிய ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை தடுப்பதில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நாடுகளில் மொரீஷியஸும் ஒன்றுஎன்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மொரீஷியஸில் இருந்து சென்னை, பெங்களூர், டெல்லி நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. மொரீஷியஸ் வழியாக கராச்சி, தென் ஆப்பிரிக்கா, ஷாங்காய், பீஜிங் ஆகிய இடங்களுக்கும் விமானங்களைஇயக்க முடிவு செய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications