அமெரிக்கா: 15 வருடங்களாக உயிருக்குப் போராடிய பெண் மரணம்
வாஷிங்டன்:
மரணத்துடன் 15 வருடங்கள் போராடிய அமெரிக்கப் பெண்ணின் உயிர் நேற்று பிரிந்தது.
புளோரிடா மாநிலத்திலுள்ள பினல்லா பார்க்கை சேர்ந்தவர் டெர்ரி ஷியாவோ (வயது 41). இவருக்கு கடந்த 1990ம் ஆண்டுமாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது மூளை செயல் இழந்தது.
கடந்த 15 வருடங்களாக அவர் உயிருக்கு போராடி வந்தார். மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு படுத்தபடுக்கையிலேயே குழாய் மூலம் திரவ உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் டெர்ரியின் கணவர், தனது மனைவி தினம் தினம் வேதனையுடன் உயிர் வாழ்கிறார். எனவே அவரை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இதற்கு டெர்ரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மருத்துவக் குழு ஒன்றை அமைத்து டெர்ரியின் உடல் நிலையை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பேரில் டெர்ரியை பரிசோதித்த மருத்துவக்குழு, தற்போதுள்ள நிலையில் டெர்ரியால் மீண்டும் நலம் பெற முடியாது. இதேநிலையில் வேண்டுமானால் படுக்கையிலேயே வாழலாம் என்று தெரிவித்தது.
இதை தொடர்ந்து டெர்ரிக்கு உணவு செல்லும் குழாயை அகற்றிவிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் கடந்த 18ம் தேதிஉணவுக் குழாய் அகற்றப்பட்டது.
இதற்கிடையே டெர்ரியின் பெற்றோர் அதிபர் புஷ்ஷை சந்தித்து முறையிட்டனர். ஆனால் தனது அதிகாரத்தின் படி இதில்தலையிட முடியாது என்று புஷ் கூறிவிட்டார்.
இந் நிலையில் உணவுக் குழாய் அகற்றப்பட்ட 13வது நாளான நேற்று டெர்ரி மரணமடைந்தார். அத்துடன் 15 ஆண்டு காலடெர்ரியின் மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications