வீராணம் விரிவாக்கத் திட்டம்: எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை:
புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புதிய வீராணம் திட்டத்தை விரிவுபடுத்தி, பெரம்பலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றிலிருந்துதண்ணீர் எடுத்து சென்னைக்குக் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தை எதிர்த்து பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமாமிர்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுசெய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்தனர். அதில், ஒரேமாநிலத்திற்குள், ஒரே மக்களுக்கு குடிநீர் வழங்க தயக்கம் காட்டக் கூடாது. இந்தப் பிரச்சினை தொடர்பாக எங்களுக்குஏராளமான கடிதங்கள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால், மக்களின் உணர்வுகளை வைத்து நாங்கள் தீர்ப்பு வழங்க முடியாது. இந்தத் திட்டம் தவறானது, முறைகேடானது என்றுகூற எந்த முகாந்திரமும் இல்லை.
இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மனுதாரர் கூறியிருப்பதற்கு எந்தவிதமான ஆதாரம், பூர்வாங்கம் இல்லை.எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசுவிளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications