ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்: பட்டதாரிப் பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Kalaivani முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் பெயரில் கொலை மிரட்டல் விடுத்த பட்டதாரிப் பெண் கைதுசெய்யப்பட்டார்.

சென்னையிலுள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் பொதுமக்களின் கருத்துக்களை அறிய தனி இணைய தளம் உள்ளது. இந்தஇணைய தளத்திற்கு "இ மெயில் மூலம் ஒரு கடிதம் வந்தது.

அந்தக் கடிதத்தில் விடுதலைப் புலிகள் பெயரில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்தக்கடிதத்தில், வருகிற சட்டசபை தேர்தலில் நீங்கள் வெற்றி பெறப்போவதில்லை.

தோல்வி அடைந்த பிறகு நீங்கள் இருக்க மாட்டீர்கள். இது விடுதலைப் புலிகளின் எச்சரிக்கை. நீங்கள் அடுத்த டிசம்பர்மாதத்திற்குள் கொலை செய்யப்படுவீர்கள். இதை சாதரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

இப்படிக்கு கன்பவர் எல்.டி.டி.இ. என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் நடராஜிடம் புகார்கொடுக்கப்பட்டது. மிரட்டல் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் சென்னை அமிஞ்சிக்கரை, பூந்தமல்லி ரோட்டிலுள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தின் இ மெயில் முகவரியிலிருந்துகடிதம் வந்தது தெரியவந்தது.

தீவிர விசாரணையில் அங்கு பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆபரேட்டரான கலைவாணி என்ற இளம்பெண் தான் மிரட்டல் கடிதம்அனுப்பினார் என தெரியவந்தது.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் மிரட்டல் கடிதம் அனுப்பியதை ஒப்புக் கொண்டார். தனக்கு அதிமுக பிடிக்காதுஎன்பதால் விளையாட்டாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கூறினார்.

கலைவாணி மீது 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+