கேரளாவில் கேள்வித்தாள் அவுட்:சென்னைப் பெண் கைது
சென்னை:
கேரளாவில் பத்தாம் வகுப்பு கேள்வித் தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சென்னைப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்தது. இதில் ஆங்கில கேள்வித் தாள் வெளியானது. இதனால் அங்கு தேர்வுதள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கேள்வித் தாள் வெளியான விவகாரம் தொடர்பாக அம்மாநில போலீஸார் விசாரணை நடத்தி பிந்து என்ற பெண்ணை கைதுசெய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் சென்னையில் வசிக்கும் பிந்துவின் சகோதரி சிந்துவுக்கும் இதில் தொடர்புஇருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து எஸ்.பி. வில்சன் ஜோசப் தலைமையில் தனிப்படை போலீஸார் தியாகராய நகரில் வசிக்கும் சிந்துவிடம்விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில் முக்கியமான சில ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீஸார் சிந்துவை கைது செய்தனர்.மேலும் இது தொடர்பாக சிந்துவின் உறவினர் சுரேஷ் என்பவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications