இரவில் தேர்வு: நாகர்கோவில் பள்ளி மீது நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

விதிமுறைகளுக்குப் புறம்பாக "பிளஸ் ஒன்" பரீட்சையை இரவில் நடத்திய நாகர்கோவில் பள்ளி மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் "பிளஸ் ஒன் தேர்வு நடந்து வருகிறது. நாகர்கோவிலில் உள்ள செவன்த்டே அட்வென்டிஸ்ட்மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் பரீட்சைகள் நடந்து வருகின்றன.

சனிக்கிழமை காலை இயற்பியல் தேர்வு நடப்பதாக இருந்தது. ஆனால் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வுதொடங்கவில்லை. மாறாக மாணவர்கள் பள்ளியிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் மாலை 6 மணிக்குத் தேர்வுதொடங்கியது.

தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்து போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சித் தலைவர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது.

இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் மேரி ரோஸ் விரைந்து வந்து கேள்வித்தாள்களைப் பறிமுதல் செய்தார். பரீட்சையை ரத்துசெய்தும் அவர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் கூறுகையில், விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்த தேர்வுநடத்தப்பட்டுள்ளது. கேள்வித் தாள் அவுட் ஆனதாகவே இது கருத்தில் கொள்ளப்படும்.

இந்தப் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இயற்பியல் தேர்வு வரும் வியாழக்கிழமை நடைபெறும்என்றார் பாலிவால்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+