தமிழகத்தில் கன மழை நீடிக்கிறது: 8 பேர் பலி
சென்னை:
தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கன மழை தொடர்ந்து நீடிக்கிறது. மழைக்கு இதுவரை 8 பேர்பலியாகியுள்ளனர்.
தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்தான்மிக அதிகமான மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில் தெருக்களில் மழை காரணமாக நீர் வெள்ளம் போல ஓடுகிறது.
எடலக்குடி என்ற இடத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், அப்துல் லத்தீப் (வயது 55), அவரது மகன் ஷாகுல்ஹமீது (வயது 19) ஆகியோர் பலியாயினர். லத்தீபின் மனைவி பாத்திமா படுகாயமடைந்தார்.
குமரி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கன்னிமார் என்ற இடத்தில்தான் 32.6 மி.மீ. மழை பெய்துள்ளது.பூதப்பாண்டி, மயிலாடி, நாகர்கோவில், கோட்டாரு ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
இதேபோல, நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது. சனிக்கிழமை மாலைமுதல் குற்றாலம் மழைப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அருவிகளிலும் தண்ணீர் கொட்டத்தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின்பெரும்பாலன பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த கன மழை இன்றும் தொடரும் என்று தெரிகிறது.
நெல்லையில் இடி தாக்கி பெண் உள்பட 2 பேர் இறந்தனர். கடலூர், நாமக்கல் தர்மபுரியில் மழைக்கு 4 பேர்இறந்தனர்.
புதுவையில் விடிய விடிய மழை பெய்ததால் வெம்மை தணிந்து நகரமே குளுகுளுவென்றானது.
நாகை மாவட்டத்தில் பெய்த கன மழையால், சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதற்காலிக வீடுகள் பல சேதமடைந்துள்ளன. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மின் வினியோகம்துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாகபாதிக்கப்பட்டனர்.
மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெய்த இந்த திடீர் மழையால்,கடும் வெப்பத்தால் தகித்து வந்த தமிழகம் ஓரளவு குளிர்ந்துள்ளது.
ராமேஸ்வரத்தில் கன மழை மற்றும் காற்றால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
காற்றழுத்தாழ்வு மண்டலம் தொடர்ந்து வங்கக் கடலில் நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலைஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications