கலவை: ஜெயேந்திரருடன் தங்கப் போகும் விஜயேந்திரர்
கலவை:
நிபந்னைப்படி சென்னையில் தங்கியுள்ள விஜயேந்திரரை கலவையில் ஜெயேந்திரருடனேயே தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
காஞ்சி மடத்தில் நடந்த அனைத்து பூஜை, புனஸ்காரங்கள், வழிபாடுகளை கலவையில் நடத்தி வரும் ஜெயேந்திரர், தன்னோடுஇளையவரையும் உடன் வைத்திருக்க முடிவு செய்துள்ளார்.
மடத்தின் சம்பிரதாயங்களுக்கு எவ்விதமான சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் ஜெயேந்திரர், காஞ்சி மடத்தைப்போலவே பக்தர்களை இளையவரோடு சேர்ந்து சந்திக்கவும் ஆசி வழங்கவும் முடிவு செய்துள்ளார்.
இதற்காக கலவை மடத்தில் இளையவருக்கும் தனி அறை கட்டப்பட்டு வருகிறது. மடத்தில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் பாடசாலையின்அருகே ஆசிரியர் குடியிருப்பில் இந்த அறை தயாராகி வருகிறது.
விரைவில் தன்னுடையே ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி விஜயேந்திரர் மனு தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிபந்தனைதளர்த்தப்பட்டால் தான் சென்னையை விட்டு வெளியே விஜயேந்திரர் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாமீன் நிபந்தனை தளர்ந்த பின்னர் விஜயேந்திரர் கலவை மடத்துக்கு வரவுள்ளார்.
பெரியவர்-இளையவர் இடையே மோதலை தீவிரமாக்கி அதில் குளிர்காய சில கும்பல்கள் முயன்றதால், அதை முறியடிக்கும் வகையில்இளையவரை தன்னுடனேயே வைத்திருக்க ஜெயேந்திரர் முடிவு செய்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications