2வது ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி
விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் தோனி அதிரடியாக ஆடி சதமடித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொச்சியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 87 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந் நிலையில் 2வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.
டாசில் வெற்றி பெற்ற கங்குலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், டெண்டுல்கரும்களமிறங்கினர். வழக்கம் போல ஷேவாக் இன்றும் அதிரடியாக ஆடினார். டெண்டுல்கர் 2 ரன்கள் எடுத்திருந்த போது ரன்அவுட்டானார்.
இதன் பிறகு ஷேவாக்குடன் விக்கெட் கீப்பர் தோனி ஜோடி சேர்ந்தார். அவரது ஆட்டம் ஷேவாக்கின் ஆட்டத்திற்கு போட்டிபோடுவது போல அதிரடியாக இருந்தது.
அபாரமாக ஆடி சதமடித்த தோனி, 123 பந்துகளில் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷேவாக் 40 பந்துகளில் 74 ரன்கள்எடுத்தார். திராவிட் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். கங்குலி வழக்கம் போல மோசமாக ஆடி ஆட்டமிழந்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்தியா 356 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 298 ரன்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் அப்துர் ரசாக் அதிரடியாக ஆடி 88 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். யூசுப் யுகானா 56 பந்துகளில் 71 ரன்கள்எடுத்தார். மற்ற வீரர்கள் யாருமே சிறப்பாக ஆடவில்லை.
இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications