போப்புக்கு அஞ்சலி: துப்பாக்கியால் சுட்டவன் ஆசை

Subscribe to Oneindia Tamil

வாடிகன்:

Pope John Paulபோப் ஆண்டவரின் உடலுக்கு லட்சக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரைதுப்பாக்கியால் சுட்ட துருக்கியை சேர்ந்த முகமது அலியும் போப்புக்கு அஞ்சலி செலுத்தச் செல்ல அனுமதிக்குமாறு துருக்கிஅரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.

போப் ஆண்டவரின் மறைவையொட்டி இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் துக்கம் கடைபிடிக்கின்றன.

போப்பின் உடல் நேற்று இரவு வாடிகன் அரண்மனையிலிருந்து புனித பீட்டர் தேவாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வந்து குவிந்துள்ள லட்சக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலிசெலுத்தி வருகின்றனர். போப்பின் உடல் அடக்கம் 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. பீட்டர் தேவாலயத்திலேயேஅவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

இறுதிச் சடங்கு மற்றும் உடல் அடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் ரோம் நகரில் குவிந்த வண்ணம்உள்ளனர். இந்தியாவின் சார்பில் குடியரசு துணைத் தலைவர் பைரோவன் சிங் ஷெகாவத், மத்திய அமைச்சர் ஆஸ்கார்பெர்னாண்டஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கிடையே போப் ஆண்டவரை கடந்த 1981ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற துருக்கியை சேர்ந்த முகமதுஅலி அகா, போப் ஆண்டவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.

போப் ஆண்டவரை சுட்டுக் கொல்ல முயன்ற வழக்கில் இத்தாலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு போப் மன்னிப்புவழங்கினார். மேலும் நேரில் சந்தித்தும் பேசினார்.

பிறகு துருக்கிக்குச் சென்ற அலி அந் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக மீண்டும்சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் இந்த நபர்.

இந் நிலையில் போப் ஆண்டவரின் உடல் அடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பி துருக்கி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்அலி. தனக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் தனது குடும்பத்தில் ஒருவரையாவது அனுப்பி வைக்க வேண்டும் என்று அவன்விருப்பம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+