ரஜினியோ, விஜயகாந்தோ: வைகோவுக்கு கவலையில்லையாம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

ரஜினிகாந்தோ, விஜயகாந்தோ யார் கட்சி தொடங்கினாலும் எங்களது கூட்டணியை வீழ்த்த முடியாது என்று வைகோ கூறினார்.

நெல்லையில் மாநகர மதிமுக ஆய்வுக் குழு கூட்டம் மற்றும் மறுமலர்ச்சி ரத்த தான கழக துவக்க விழா நடைபெற்றது. இதில்பங்கேற்ற வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா பொத்தாம் பொதுவாககுற்றம் சாட்டுவது சரியல்ல.

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகளை பேச விடாமல் செய்கின்றனர். இதற்கெல்லால் தேர்தல் மூலம் மக்கள் பதிலளிப்பார்கள்.

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் இன்னும் முறையானஅறிவிப்பை வெளியிடவில்லை.

அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசிமுடிவெடுப்போம். அதை கூட்டணி தலைவர் கருணாநிதி அறிவிப்பார்.

சபாநாயகர் காளிமுத்து, நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார். தனது மனசாட்சியின்படி பதவியை ராஜினாமாசெய்யவேண்டிய அவர், இப்போது திரிசங்கு நிலையில் உள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, "நானே ஒரு குற்றவாளியாக இருக்கிறேன். நான் பதவியை ராஜினாமா செய்யாதபோது நீங்கள் பதவியைராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்க மாட்டாரா? இதனால் காளிமுத்து முதல்வரின் கோபத்துக்கு ஆளாவார்.

எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டார். அவர் ராஜினாமா செய்தால் அது ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

எந்த நடிகரும் அரசியலில் குதிக்கலாம். தேர்தலில் போட்டியிடலாம். ரஜினியானாலும், விஜயகாந்தானாலும் எல்லோரும்நண்பர்கள் தான். ஆனால் யார் கட்சியை தொடங்கினாலும் எங்களது கூட்டணியை வீழ்த்த முடியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+