சென்னையில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து 4 பேர் சாவு
சென்னை:
சென்னையில் பெய்த கன மழைக்கு 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து, அதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4தொழிலாளர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.
இதில் உச்சகட்டமாக மயிலாப்பூரில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரை பலி வாங்கியுள்ளது.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் மாவட்ட வேலை வாய்ப்பக அலுவலகத்திற்கு எதிரே 5 மாடிக் கட்டடம் உள்ளது. இங்குதமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை இயங்கி வந்தன. 25 ஆண்டுபழமையான இந்தக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு வந்தது.
அதில் 20 தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நேற்று காலை முதல் சென்னையில் பலத்த மழை கொட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மாலை 5.30 மணியளவில்கட்டடத்தின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 9 தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். மற்றவர்கள்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 9 பேரையும் மீட்கும்முயற்சி தீவிரப்படுத்தப்படது. இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மீட்புப் பணி மந்தமாகவே நடந்தது.
சம்பவம் குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், பி.சி.ராமசாமி, டிஜிபி அலெக்சாண்டர், சென்னைமாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், இணை ஆணையர் சைலேந்திரபாபு, மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன்உள்ளிட்டோர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.
அமைச்சர்கள் அங்கேயே இருந்து இரவு 11 மணி வரையிலும் மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.
நள்ளிரவுக்கு மேல் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தக் கட்டடத்தில் வேலைபார்த்தவர்களில் இளவரசன், பாஸ்கர், வினோத், பாரத், ரமேஷ், மணி, புஷ்பராஜ் உள்ளிட்ட 11 பேர் திருவள்ளூர் மாவட்டம்நெய்தலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications