தர்மபுரி பஸ் எரிப்பு: கண்ணீர் மல்க டிரைவர் சாட்சியம்
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணையில் மாணவிகள் சென்ற பஸ்சை ஓட்டிய டிரைவர் கண்ணீர் மல்க சாட்சியம் அளித்தார்.அவர் பஸ்சுக்குள் பெட்ரோல் ஊற்றியவரை அடையாளம் காட்டினார்.
டிரைவர் கந்தசாமி கூறுகையில், கடந்த 22-1-2001 அன்று கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் சுற்றுலா சென்றபஸ்சை நான் தான் ஓட்டிச் சென்றேன்.
முதலில் பையூர் சென்ற நாங்கள் மறுநாள் ஒகனேக்கல் செல்ல புறப்பட்டோம். செல்லும் வழியில் தர்மபுரி சென்று அங்குள்ள ஒருஹோட்டலில் சாப்பிட்டோம். நான் சாப்பிட்டு விட்டு பஸ் அருகே நின்று கொண்டிருந்தேன்.
அப்போது என் அருகே வந்த ஒருவர் தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 1வருடம் சிறைத் தண்டனை விதித்துள்ளதால் பல இடங்களில் பிரச்சினையாக உள்ளது. பார்த்து கவனமாக செல்லுங்கள் என்றுகூறினார்.
அப்போது அங்கு வந்த பல்கலைக்கழக மாணவர்களும் இந்த தகவலை சொன்னார்கள். இதனால் பேராசிரியர்கள், மாணவ,மாணவிகளை பஸ்சில் இருக்க சொல்லிவிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு போன் செய்து நிலைமையைசொல்வதற்காக சென்றார்கள்.
அந்த நேரத்தில் சுமார் 100 அல்லது 150 பேர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அங்குள்ள கடைகளை அடைக்குமாறுகூறினார்கள். நாங்கள் பயந்து பஸ்களை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள காலி இடத்தில்நிறுத்தினோம்.
சிறிது நேரத்தில் போன் செய்யச் சென்ற பேராசிரியர்கள் திரும்பினார்கள். இதன் பிறகு நாங்கள் பாதுகாப்பு கருதி தர்மபுரி கலெக்டர்அலுவலகத்திற்கு புறப்பட்டோம். சிறிது தூரம் சென்ற போது போக்குவரத்து தடைப்பட்டு இருந்ததால் பஸ்சை நிறுத்தினோம்.
சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அதிலிருந்து இறங்கிய 2 பேர், ஒரு கேனில் கொண்டு வந்த திரவத்தைபஸ்சினுள் ஊற்றினார்கள். வாசனையை வைத்து அது பெட்ரோல் எனத் தெரிந்து கொண்டேன்.
உடனே நான், "மேடம் பஸ்சுக்குள் பெட்ரோல் ஊற்றுகிறார்கள் என்று கத்தினேன். பஸ்சில் இருந்தவர்களும், எங்களை ஒன்றும்செய்து விடாதீர்கள் என கெஞ்சினார்கள். நானும் அவர்களிடம் கெஞ்சினேன்.
அதற்குள் அவர்கள் இருவரும் பஸ்சினுள் பெட்ரோலை ஊற்றிவிட்டு சென்று விட்டார்கள். சிறிது நேரத்தில் பஸ் எரியத்தொடங்கியது. பஸ் எரியத் தொடங்கியதும் நான் பஸ்சிலிருந்து கீழே குதித்தேன். மாணவிகள் மற்றும் ஆசிரியைகளும்பஸ்சிலிருந்து கீழே குதித்தார்கள்.
கருகிய 3 உடல்கள்:
பஸ் ஜன்னல் வழியே பல மாணவிகளை நாங்கள் காப்பாற்றினோம். அதற்குள் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. சிறிதுநேரத்தில் தீயணைக்கும் படையினர் வந்து தீயை அணைத்தார்கள்.
சிறிது நேரம் கழித்து கழித்து பார்த்தபோது பஸ்சின் படிக்கட்டில் 3 மாணவிகள் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்கள்.(இதைக் கூறும்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார்)
இதன் பிறகு இரவு 7 மணியளவில் போலீஸார் கிரேன் கொண்டு வந்து பஸ்சை இழுத்து சென்றார்கள். அதுவரை நான் பஸ்சின்அருகிலேயே இருந்தேன். அதன் பிறகு மற்ற மாணவிகளை பையூருக்கு அழைத்து செல்லும்படி கூறியதால் நான் பையூருக்குசென்று விட்டேன் என்றார்.
இதன் பிறகு பஸ்சுக்கு பெட்ரோல் ஊற்றிய நெடுஞ்செழியனை அவர் அடையாளம் காட்டினார். தொடர்ந்து டிரைவர் கந்தசாமியைஎதிர்த்தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications