சென்னை: கூடுதல் போலீஸ் கமிஷ்னர் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
புதிய கூடுதல் ஆணயராக தென் மண்டல ஐ.ஜியாக இருந்து வந்த டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனதுபொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அவர் ஆணையர் நடராஜிடமிருந்து நியமன உத்தரவைப் பெற்றுக்காண்டார். அவருக்கு நடராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் சென்னை மகாநகரின் இணை ஆணையர்களான சைலேந்திரபாபு, ஜி.யு.சி.சாஸ்திரி, சுனில்குமார் ஆகியோருடன்ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை (தெற்கு) இணை ஆணையர் அலுவலகம் விரைவில் பரங்கிமலைக்கு மாற்றப்படவுள்ளது. அந்த அலுவலகம் கூடுதல்ஆணையரகமாக மேம்படுத்தப்பட்டு கூடுதல் ஆணையர் அங்கிருந்து செயல்படுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications