ரவியிடம் இன்று குறுக்கு விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்திடம் இன்று ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணைநடத்தவுள்ளனர்.
இந்த மனு மீது 5ம் தேதி விசாரணை நடந்தது. அப்போது பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் வி.பாலசுந்தரம்,
அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளார் என்றார்.
இதற்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார். குற்றவாளி எண் 5 (அப்பு), தெலுங்கில் குற்றப் பத்திரிக்கைநகலைக் கேட்டுள்ளார். அது வழங்கப்பட்ட பிறகு தான் விசாரணையைத் தொடங்க முடியும் என்றார்.
அப்போது அரசு வழக்கறிஞர் பாலசுந்தரம் நீதிபதி உத்தமராஜனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், 1967 முதல் 74 ம் ஆண்டு வரை சென்னை தியாகராஜா உயர் நிலைப் பள்ளியில், தமிழை முதல்பாடமாக எடுத்து அப்பு படித்துள்ளார். இதை உறுதி செய்து பள்ளி தலைமை ஆசிரியர், காஞ்சிபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பிரேம்குமாரிடம் சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ராஜரத்தினம், மனுவாகத்தான் எதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால் அரசு வழக்கறிஞர் கடிதத்தை தாக்கல் செய்கிறார். இதை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றார்.
அப்புவின் வழக்கறிஞர் லட்சுமண ரெட்டியார் கூறுகையில், போலீஸார் இதுவரை தாக்கல் செய்தள்ள ஆவணங்களின் பட்டியலைஎங்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் என்னென்ன தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியும்.விசாரணையின்போது புதிதாக போலீஸார் எதையாவது தாக்கல் செய்தால் அது விசாரணையை பாதிக்கும் என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் கடுமையாக மோதினர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி உத்தமராஜன், வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு அரசு வழக்கறிஞரான பாஸ்கரன் எழுந்து, ரவி சுப்பிரமணியத்தின் குறுக்கு விசாரணைதேவையில்லாமல் தாமதமாகி வருகிறது. எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள் மாறி மாறி ஏதாவது ஒரு மனுவைத் தாக்கல் செய்துவருவதால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு விசாரணை நடைபெறும் எனவும் அப்போது ரவி சுப்பிரமணியத்தைஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றும் நீதிபதி அறிவித்தார்.
இதன்படி இன்று ஜெயேந்திரர் உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர். அப்போது குற்றப்பத்திரிகை நகலைதெலுங்கில் வழங்கக் கோரி அப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்பட்டியலை வழங்கக் கோரி ஜெயேந்திரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகியவற்றின் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும்.
இதைத் தொடர்ந்து ரவி சுப்பிரமணியத்திடம் விசாரணை நடைபெறும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications